• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • '31 வருடங்களுக்கு முன் நடந்த துயரச் சம்பவம்'' - பென் ஸ்டோக்ஸைக் காயப்படுத்திய பிரபல நாளிதழ் கட்டுரை

'31 வருடங்களுக்கு முன் நடந்த துயரச் சம்பவம்'' - பென் ஸ்டோக்ஸைக் காயப்படுத்திய பிரபல நாளிதழ் கட்டுரை

பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ் பிறப்பதற்கு 3 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம். ஸ்டோக்ஸின் தாய் டெப்புக்கும் முதல் கணவருக்கும் 2 குழந்தைகள் இருந்து உள்ளனர்.

  • Share this:
31 வருடத்திற்கு முன் தனது குடும்பத்தில் நடந்த சோகமான சம்பவத்தை கட்டுரையாக வெளியிட்ட பத்திரிகையை பென் ஸ்டோக்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

உலகக் கோப்பையை முதன்முறையாக இங்கிலாந்து வெல்ல முக்கிய வீரராக இருந்தவர் பென் ஸ்டோக்ஸ். நியூசிலாந்தை பூர்விகமாக கொண்டவராக இருந்தாலும் பென் ஸ்டோக்ஸிற்கு இங்கிலாந்து நாட்டு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் பென் ஸ்டோக்ஸிற்கு தற்போது கசப்பான சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது. 31 வருடத்திற்கு முன்னர் அவரது குடும்பத்தில் நடைபெற்ற துயர சம்பவத்தை சன் பத்திரிகை கட்டுரையாக வெளியிட்டுள்ளது.

நியூசிலாந்தில் 31 ஆண்டுகளுக்கு முன், அதாவது பென் ஸ்டோக்ஸ் பிறப்பதற்கு 3 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம். ஸ்டோக்ஸின் தாய் டெப்புக்கும் முதல் கணவருக்கும் 2 குழந்தைகள் இருந்து உள்ளனர். அவர்களை அவரது தந்தையே துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார். அதன்பின் ஸ்டோக்ஸ் தாயார் 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த செய்தியை தற்போது இங்கிலாந்து சன் பத்திரிக்கை கட்டுரையாக வெளியிட்டுள்ளது. இது குறித்து பென் ஸ்டோக்ஸ் வெளியிட்டுள்ள ட்டிவிட்டர் பதிவில், 30 வருடங்களுக்கு முன் நடந்த இந்த கசப்பான சம்பவத்தை மறக்க நினைக்கும் எங்களுக்கு, இந்தச் சம்பவத்தைக் கட்டுரையாக வெளியிட்டுள்ளார்கள். இது எங்களது உணர்வை அவமதிக்கும் செயல். இதை எங்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.

பிரபலமாக இருப்பதால் என்னுடைய சுயவிவரம் பொதுவெளியில் எனக்கு ஏற்படுத்தும் விளைவுகளைத் தருவதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் என் பெயரைப் பயன்படுத்தி என் பெற்றோர், மனைவி, குழந்தைகள் எனது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளை மீறும் செயலை நான் அனுமதிக்க மாட்டேன்” என்று ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: