25 பந்துகளில் 134 ரன்கள் - ஒரே ஓவரில் 34 ரன்கள்- பென் ஸ்டோக்ஸ் ருத்ர தாண்டவம்- மொத்தம் 17 சிக்ஸ் 8 பவுண்டரி
25 பந்துகளில் 134 ரன்கள் - ஒரே ஓவரில் 34 ரன்கள்- பென் ஸ்டோக்ஸ் ருத்ர தாண்டவம்- மொத்தம் 17 சிக்ஸ் 8 பவுண்டரி
பென் ஸ்டோக்ஸ்
இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் டர்ஹாமில் நடைபெற்ற வொர்ஸ்டர்ஷயர், டர்ஹாம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பென் ஸ்டோக்ஸ் 64 பந்துகளில் காட்டடி சதம் அடித்து சாதனை புரிந்தார், இங்கிலாந்து கேப்டனாக நியமிக்கப்பட்டதால் அவர் பொறுப்புடன் கவுண்ட்டி கிரிக்கெட், பயிற்சி என்று தீவிரம் காட்டி வருகிறார். இவர் பார்முக்கு வந்தால் எந்த அணியும் தாங்காது என்பதற்கு இந்த இன்னிங்ஸ் ஒரு உதாரணம்.

இந்த கவுண்ட்டி ஆட்டத்தில் டாஸ் வென்ற டர்ஹாம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.அணியின் பேட்டிங் வரிசையில் 6வது வீரராக இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினார்.
முதல் 47 பந்தில் அரை சதம் அடித்த பென் ஸ்டோக்ஸ், அடுத்த 17 பந்தில் சதம் விளாசி 64 பந்துகளில் சதம் கடந்தார். வொர்செஸ்டர்ஷைர் அணியின் ஜோஷ் பேக்கர் வீசிய 117வது ஓவரில் 5 சிக்சர், ஒரு பவுண்டரி என 34 ரன் எடுத்து சதம் கடந்தார்.
அபாரமாக ஆடிய ஸ்டோக்ஸ் 88 பந்தில் 17 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 161 ரன் எடுத்து கைகொடுக்க, முதல் இன்னிங்சில் துர்ஹாம் அணி 6 விக்கெட்டுக்கு 580 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. அதாவது சிக்சர் பவுண்டரிகளிலேயே 25 பந்துகளில் 134 ரன்களைக் குவித்துள்ளார் பென் ஸ்டோக்ஸ்.
இந்தப் போட்டியில் 17 சிக்சர் பறக்கவிட்ட ஸ்டோக்ஸ் கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் விளாசிய வீரரானார்.
இதற்கு முன் குளோசெஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடிய சைமண்ட்ஸ், எசக்ஸ் அணிக்காக பங்கேற்ற கிரஹாம் நேப்பியர் ஆகியோர் தலா 16 சிக்சர் அடித்திருந்தது சாதனையாக இருந்தது.
டர்ஹாம் அணியின் டேவிட் பெடிங்காம் என்பவரும் 135 ரன்கள் விளாசினார். பதிலுக்கு வொர்ஸ்டர்ஷயர் அணி தன் முதல் இன்னிங்சில் 169/6 என்று தடுமாறுகிறது 9 ஓவர்கள் வீசிய பென் ஸ்டோக்ஸ் 13 ரன்கள் கொடுத்தார் விக்கெட் இல்லை.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.