நியூசிலாந்தின் உயரிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 'பென் ஸ்டோக்ஸ்'

news18
Updated: July 19, 2019, 7:58 PM IST
நியூசிலாந்தின் உயரிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 'பென் ஸ்டோக்ஸ்'
பென் ஸ்டோக்ஸ்
news18
Updated: July 19, 2019, 7:58 PM IST
நியூசிலாந்து அணியின் உலகக் கோப்பை கனவை தகர்த்த பென் ஸ்டோக்ஸ் பெயர் நியூசிலாந்தின் உயரிய விருதுக்கு பரிந்துரைகக்கப்ட்டுள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் பென் ஸ்டோக்ஸின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து வீரர் என்றாலும் அவருடைய பூர்வீகம் நியூசிலாந்து.

நியூசிலாந்தில் பிறந்த பென் ஸ்டோக்ஸ் 12 வயதிருக்கும் போது இங்கிலாந்து நாட்டிற்கு குடியேறினார். இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடி வந்தாலும் அவர்களது பெற்றோர் தற்போது நியூசிலாந்தில் தான் வாழ்ந்து வருகின்றனர்.

Also Read: சச்சின் வெளியிட்ட உலக லெவன் அணியில் 5 இந்திய வீரர்கள்...! தோனிக்கு இடமில்லை

இந்நிலையில் நியூசிலாந்தின் உயரிய விருதான 'நியூசிலாந்தர் ஆப் தி இயர்' என்ற விருதுக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன்னும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

அந்த நாட்டின் கலை, அறிவியல், விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுவார்கள்.

இங்கிலாந்தின் உயரிய விருதான 'நைட் ஹூட்' விருதும் அவருக்கு விரைவில் வழங்கப்பட உள்ள நிலையில் நியூசிலாந்தின உயரிய விருதுக்கும் பரிந்துரைக்கப்ட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Also Read : எங்களுக்கு சொன்னது அவருக்கும் பொருந்தும் - தோனி ஓய்வு குறித்து கம்பீர் கருத்து

Also See...

பிரபல கிரிக்கெட் வீரர்கள் வயதனால் எப்படி இருப்பார்கள்!தோனியை விட்டுக்கொடுக்காத ரசிகர்கள்...!

First published: July 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...