Home » News » Sports » CRICKET BEN STOKES LEADS ENGLAND TEST TEAM VJR

இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமனம்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தற்காலிக கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமனம்
பென் ஸ்டோக்ஸ்
  • Share this:
கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலால் கடந்த நான்கு மாதங்களாக கிரிக்கெட் உலகம் முடங்கிக்கிடக்கிறது. இங்கிலாந்தில் வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதால் கிரிக்கெட் போட்டியை தொடங்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்தது. அதன் அடிப்படையில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டது.

முதல் டெஸ்ட் போட்டி வரும் 8 ம் தேதி சௌத்தாம்ப்டனில் தொடங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணிக்கு உலகக் கோப்பை நாயகன் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜோ ரூட் மனைவிக்கு சமீபத்தில் குழந்தை பிறக்க இருப்பதால் முதல் போட்டியில் அவருக்கு விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கொரோனோ காலத்தில் தொடங்கும் முதல் சர்வதேச போட்டி என்பதால் உலகமே இந்த போட்டியை எதிர்பார்த்து காத்திருக்கிறது. மேலும் இந்த போட்டியை மைதானம் சென்று பார்ப்பதற்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இங்கிலாந்து அணி விவரம் : பென் ஸ்டோக்ஸ் ( கேப்டன்), ஆண்டர்சன், ஆர்ச்சர், டோமினிக் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், பட்லர், ராரி பேர்ன்ஸ், ஸாக் கிராவ்லி, ஜோ டென்லி, போப், டாம் சிப்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்
First published: July 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading