இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்டின் 2 வது நாளில் தனது காட்டுத்தனமான சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
244/3 என்ற நிலையில் 2-வது நாள் மீண்டும் தொடங்கும் போது, இங்கிலாந்தின் ஜோ ரூட் பென் ஸ்டோக்ஸுடன் இணைந்தார், இருவரும் கரீபியன் பந்துவீச்சாளர்களுக்கு உண்மையிலேயே சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தனர். முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 507 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 316 பந்துகளுக்கு 14 பவுண்டரிகளுடன் 153 ரன்கள் எடுத்து கிமார் ரோச் பந்தில் எல்.பி.ஆனார்.
பென் ஸ்டோக்ஸ் 128 பந்துகளில் 11 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 120 ரன்கள் எடுத்து பிராத்வெய்ட் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த இருவரும் கரீபியன் பந்துவீச்சாளர்களுக்கு உண்மையில் ஆபத்தாக இருந்தனர். 129 ரன்கள் என்ற நீண்ட பார்ட்னர்ஷிப்பை உருவாக்க அவர்கள் மைதானத்தின் ஒவ்வொரு மூலையிலும் பந்து வீச்சை அடித்து நொறுக்கினர்.
இறுதியாக 373/4 என்ற நிலையில் 153 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரூட் கெமர் ரோச்சால் ஆட்டமிழந்தபோது அவர்களது நீண்ட கூட்டாண்மை முடிவுக்கு வந்தது. ரூட்டின் விக்கெட்டைத் தொடர்ந்து, ஜானி பேர்ஸ்டோ பேட்டிங்கிற்கு வந்தார், ஸ்டோக்ஸுடன் இணைந்து, இருவரும் தங்கள் அணிக்கு 400 ரன்களைக் கடந்தனர். அல்சாரி ஜோசப் பேர்ஸ்டோவை வெளியேற்றிய பிறகு மேற்கிந்திய தீவுகள் இறுதியாக நிம்மதி பெருமூச்சு விட்டனர், ஸ்டோக்ஸை பிராத்வைட் திருப்பி அனுப்பினார்.
பின்னர், பென் ஃபோக்ஸ் மற்றும் கிறிஸ் வோக்ஸ் கைகோர்த்து ஸ்கோர்போர்டை நகர்த்தினார். ஃபோக்ஸ் 33 ரன்களுக்குப் பிறகு பெருமாள் பந்தில் ஆட்டமிழந்தார், மேலும் அவரது விக்கெட்டைத் தொடர்ந்து கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜாக் லீச் வெளியேற்றப்பட்டார், இங்கிலாந்து 507/9 என்று டிக்ளேர் செய்தது.
பின்னர், பேட்டிங் செய்ய வந்த மேற்கிந்தியத் தீவுகள், தொடக்க ஆட்டக்காரர் ஜான் கேம்ப்பெல், மேத்யூ ஃபிஷரால் வெளியேற்றப்பட்டதால், 14 ரன்கள் மட்டுமே இருந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆரம்ப அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனால் கேப்டன் கிரெய்க் ப்ராத்வெய்ட் (28), ஷம்ரா புரூக்ஸ் (31) ஆகியோர் மேலும் சேதமேற்படாமல் காத்து 71/1 என்று நாளை முடித்தனர்.
120 ரன்கள் எடுத்த நிலையில், பென் ஸ்டோக்ஸ் வரலாற்று புத்தகத்திலும் நுழைந்தார். ஆல்ரவுண்டர் இப்போது 5,000 டெஸ்ட் ரன்களை எடுத்துள்ளார். 5,000 டெஸ்ட் ரன்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளைக் கொண்ட உலகின் ஐந்தாவது கிரிக்கெட் வீரர் இப்போது அவர் ஆவார். கேரி சோபர்ஸ், இயன் போத்தம், கபில் தேவ் மற்றும் ஜாக் காலிஸ் உள்ளிட்ட ஆல்ரவுண்டர்களின் உயர் பட்டியலில் பென் ஸ்டோக்ஸ் இணைந்துள்ளார்.
கேரி சோபர்ஸ் - 93 டெஸ்டில் 8032 ரன்கள் மற்றும் 235 விக்கெட்டுகள்
இயன் போதம் - 102 டெஸ்டில் 5200 ரன்கள் மற்றும் 383 விக்கெட்டுகள்
கபில்தேவ் - 131 டெஸ்டில் 5248 ரன்கள் மற்றும் 434 விக்கெட்டுகள்
ஜாக் காலிஸ் - 166 டெஸ்டில் 13289 ரன்கள் மற்றும் 292 விக்கெட்டுகள்
பென் ஸ்டோக்ஸ் - 78 டெஸ்டில் 5021 ரன்கள் மற்றும் 170 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ben stokes, England, Joe Root, West indies