இங்கிலாந்தின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார், நாளை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் முதல் ஒருநாள் போட்டிதான் பென் ஸ்டோக்ஸ் ஆடும் கடைசி ஒருநாள் போட்டி. இது இங்கிலாந்துக்கு ஒரு ஷாக்தான்.
இங்கிலாந்துக்காக 104 ஒருநாள்போட்டிகளில் ஆடிய பென் ஸ்டோக்ஸ் 39.44 என்ற பேட்டிங் சராசரி வைத்துள்ளார். 2919 ரன்களை மட்டும் எடுத்துள்ளார். இந்த வடிவத்தில் 3 சதங்கள் 21 அரைசதங்கள் எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 95.26.
38 பவுண்டரி 88 சிக்ஸ் அடித்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 102 நாட் அவுட்.
ஆனால் ஒருநாள் போட்டிகள் பவுலிங்கில் ஸ்டோக்ஸ் 74 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார், பெஸ்ட் பவுல்டிங் 61/5.
“இந்த வடிவத்திலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துவிட்டேன், நாளை (செவ்வாய்) நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியே என் கடைசி போட்டி. மிகவும் கடினமான முடிவுதான். என் சகாக்களுடன் இந்த வடிவத்தில் ஆடிய அனைத்து கணங்களையும் நேசிக்கிறேன்.
என்னால் 100% பங்களிப்பு செய்ய முடியவில்லை. யார் இங்கிலாந்தின் உடைகளை அணிந்தாலும் அதை விரயம் செய்ய முடியாது ஆகவே ஓய்வு பெறுவது நல்லது என்று முடிவெடுத்தேன்.
3 வடிவங்கள் என்பது என்னால் இப்போது இயலாத ஒன்று. ஷெட்யூல் மிகவும் டைட்டாக இருப்பதால் என் உடல் அதற்கேற்ப தயாராக இல்லை. இதனால் என்னிடமிருந்து எதிர்பார்க்கப்படும் பங்களிப்பும் வருவதில்லை. மேலும் இன்னொருவரின் இடத்தில் இருப்பதாக உணர்கிறேன், இன்னொரு வீரர் என்னை விட ஜாஸ் பட்லருக்கு நல்ல பங்களிப்பு செய்ய முடியும் என்றே கருதுகிறேன்.
கடந்த 11 ஆண்டுகள் எனக்குக் கிடைத்த நினைவுகள் இன்னொரு வீரருக்கும் கிடைக்கட்டும். இந்த முடிவை அடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அனைத்து பங்களிப்பையும் செய்வேன், டி20 கிரிக்கெட்டில் முழு மூச்சாக இறங்குவேன்” என்றார் பென் ஸ்டோக்ஸ்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ben stokes, England, Retirement