Home /News /sports /

பினிஷர் என்கிறார்கள், எங்கே களமிறக்குகிறார்கள்?- தினேஷ் கார்த்திக் குறித்து முன்னாள் வீரர்

பினிஷர் என்கிறார்கள், எங்கே களமிறக்குகிறார்கள்?- தினேஷ் கார்த்திக் குறித்து முன்னாள் வீரர்

தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட்

தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட்

தினேஷ் கார்த்திக்கை பினிஷர் என்று அணியில் தேர்வு செய்கிறார்கள், ஆனால் குறித்த நேரத்தில் அவரை களமிறக்குவதில்லை என்று முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் விவேக் ரஸ்தான் குற்றம் சாட்டியுள்ளார்.

  • 2 minute read
  • Last Updated :
    தினேஷ் கார்த்திக்கை பினிஷர் என்று அணியில் தேர்வு செய்கிறார்கள், ஆனால் குறித்த நேரத்தில் அவரை களமிறக்குவதில்லை என்று முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் விவேக் ரஸ்தான் குற்றம் சாட்டியுள்ளார்.

    விவேக் ரஸ்தான் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவுக்காக முதல் டெஸ்ட் போட்டியை பாகிஸ்தானில் ஆடி அறிமுகப் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர், அதன் பிறகு பெரிய அளவில் இவரை வளர்த்தெடுக்கவில்லை.

    இந்நிலையில் தினேஷ் கார்த்திக்கை பினிஷர் என்று பட்டம் சூட்டி அவரை அதற்குத் தயார் படுத்தி வருகின்றனர். ஆனால் பினிஷர் என்றால் ஸ்ரீகாந்த் கூறுவது போல் 8-9-வது ஓவரில் இறக்கி 19-20 ஓவர் வரை ஆடுபவர், இலக்கை விரட்டுபவர் என்றால் 19வது ஓவரில் இலக்கை விரட்டி மேட்சை முடிக்க வேண்டும். 16 அல்லது 18வது ஓவரில் இறங்குபவர் பினிஷர் அல்ல. முதலில் ஒரு வீரர் 70-80 ரன்களை அடித்து இலக்கிற்கு அருகில் கொண்டு வைப்பார், அதன் பிறகு கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவை என்றால் முடித்துக் கொடுப்பவர் பினிஷரா என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கேட்பது சரியானதுதான்.

    ஆனால் தினேஷ் கார்த்திக்கை பினிஷர் என்று முத்திரைக் குத்தி அவரை 13-14வது ஓவரில் இறக்காமல் இந்திய அணி நிர்வாகம் அவரை இன்னும் பின்னால் களமிறக்கி வருகிறது. ஆசியக் கோப்பையில் தினேஷ் கார்த்திக் ஆடினாலும் டி20 உலகக்கோப்பையில் இவருக்கு ரிஷப் பண்ட்டுடன் கடும் போட்டி இருக்கும், அப்படியிருக்கும்போது தினேஷ் கார்த்திக் மீது கோடரி விழும் என்பது அனைவரும் அறிந்ததே.

    இந்நிலையில் விவேக் ரஸ்தான் இந்த விஷயத்தைச் சுட்டிக்காட்டி பேசுகையில், “பினிஷர் பொறுப்பில் சீரான முறையில் சோபிப்பது கடினமானது. ஒவ்வொரு முறை இறங்கும்போதும் அணியின் வெற்றிக்குக் கைக்கொடுக்க வேண்டும். இதனால் கடும் அழுத்தமும் நெருக்கடியும் இருக்கும்.பவுலர்களும் இவர்களை வீழ்த்த உத்திகள் பல வகுப்பார்கள்.

    இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கை ஸ்பெஷலிஸ்ட் பினிஷர் என்றே தேர்வு செய்துள்ளனர். ஆனால் அவரை சரியான நேரத்தில் களமிறக்காமல் இஷ்டத்துக்கு இறக்குவது வியப்பாக இருக்கிறது. சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, கோலி, பாண்டியா போன்றோர் தினேஷ் கார்த்திக் பணியை செய்வார்களா” என்கிறார் விவேக் ரஸ்தான்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Asia cup cricket, Dinesh Karthik

    அடுத்த செய்தி