முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘ஆஸி. தொடருக்கு முன்னதாக இந்திய வீரர்கள் ரஞ்சி கோப்பையில் விளையாடியிருக்க வேண்டும்’ – கவுதம் காம்பீர் கருத்து

‘ஆஸி. தொடருக்கு முன்னதாக இந்திய வீரர்கள் ரஞ்சி கோப்பையில் விளையாடியிருக்க வேண்டும்’ – கவுதம் காம்பீர் கருத்து

கவுதம் காம்பீர்

கவுதம் காம்பீர்

ஆஸ்திரேலிய அணி வலைப் பயிற்சியில் சரியாக ஈடுபடாததால் முதல் 2 போட்டிகளில் தடுமாறியது. பயிற்சி பெறாதது அவர்களுக்கு நெகடிவான மன நிலையை ஏற்படுத்தி விட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இந்த தொடருக்கு முன்னதாக இந்திய வீரர்கள் ரஞ்சி தொடரில் விளையாடியிருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கூறியுள்ளார். இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது . முதல் 2 போட்டிகளில் அந்த அணி தோல்வி அடைந்த நிலையில், 3 ஆவது போட்டியில் வெற்றி பெற்று ஃபார்முக்கு திரும்பியுள்ளது.

இந்த நிலையில் நாளை 4 ஆவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றுவதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும். இந்நிலையில் இந்திய வீரர்களின் பர்ஃபார்மென்ஸ் குறித்து முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கு முன்பாக இந்திய அணி வீரர்கள் ரஞ்சி தொடரில் விளையாடியிருக்க வேண்டும். 20 நாட்கள் அவர்கள் வலைப் பயிற்சியில் ஈடுபட்டாலும் அது ரஞ்சி தொடரில் விளையாடியதற்கு சமம் ஆகாது.

ஆஸ்திரேலிய அணி வலைப் பயிற்சியில் சரியாக ஈடுபடாததால் முதல் 2 போட்டிகளில் தடுமாறியது. பயிற்சி பெறாதது அவர்கள் மனதில் நெகடிவான சூழலை ஏற்படுத்தி விட்டது. மிக முக்கியான டெஸ்ட் தொடர்களை விளையாடுவதற்கு முன்பாக, பயிற்சி ஆட்டங்களில் விளையாடுவது மிக மிக அவசியம். இவ்வாறு அவர் கூறினார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நாளை தொடங்கவுள்ளது. இதில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரைக் கைப்பற்றுவதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பில் இந்திய அணியின் ரசிகர்கள் உள்ளனர்.

First published:

Tags: Cricket