Home /News /sports /

இந்தியாவை இந்தியாவில் வீழ்த்தாமல் ஓய்வு இல்லை- டேவிட் வார்னர் பேராசை

இந்தியாவை இந்தியாவில் வீழ்த்தாமல் ஓய்வு இல்லை- டேவிட் வார்னர் பேராசை

வார்னர்.

வார்னர்.

ஆஷஸ் தொடர் 2021-22-ல் தொடரை ஆஸ்திரேலியா 3-0 என்று கைப்பற்றியது. முன்னதாக டி20 உலகக்கோப்பையையும் வென்று வரலாறு படைத்தது ஆஸ்திரேலியா, இந்த 2 அணிகளிலும் இருந்த வார்னரின் லட்சியம் என்னவெனில் ஓய்வு பெறுவதற்குள் இந்திய அணியை இந்திய மண்ணில் வீழ்த்திவிட வேண்டும் என்பதே.

வார்னர் ஆஸ்திரேலிய ஊடகத்துக்கு தெரிவிக்கும் போது, “ஆஷஸ் தொடரை வெல்வது மிகப்பெரியது. இந்திய அணியை இன்னும் இந்தியாவில் வீழ்த்தவில்லை, அப்படி வீழ்த்தினால் அது அருமையாகவே இருக்கும்.

ஆஷஸைப் பொறுத்தவரையில் 2019-ல் இங்கிலாந்தில் டிரா செய்தோம். அடுத்த முறை அங்கு சென்று வாய்ப்பு கிடைத்தால் தொடரை வெல்வோம், வாய்ப்பு கிடைத்தால் அதிலும் சிறப்பாக ஆடத்திட்டமிட்டுள்ளேன்.” என்றார் வார்னர்.

வார்னருக்கு இப்போது வயது 35. 2023-ல் இங்கிலாந்துக்கு ஆஷஸ் தொடருக்குச் செல்லும் போது வார்னர் வயது 37 ஆக அதிகரித்திருக்கும். ஆனால் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனிடமிருந்துதான் உத்வேகம் பெறுவதாகக் கூறுகிறார் வார்னர்.

இந்தியாவில் வார்னரின் சராசரி 26, இங்கிலாந்தில் சமீபமாக சராசரி 24 தான்.

“ஜேம்ஸ் ஆண்டர்சன் எங்களைப்போன்ற வயதானவர்களுக்கெல்லாம் ஒரு பெஞ்ச் மார்க்காக இருக்கிறார். அவர் போல் ஆகும் எங்களுக்கு அவர்தான் முன்னுதாரணம். என்னைப் பொறுத்தவரை என்ன வயதானாலும் ரன்கள் எடுக்க வேண்டும். இந்தத் தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் நான் முறையான பேட்டராக ஆடினேன்.

என் கரியரையே வேறு மாதிரி ஆடுவது போல் உணர்கிறேன். பவுலர்களை மதிக்கிறேன், லைன் மற்றும் லெந்த்களை மதிக்கிறேன். ஆனால் நூறு மட்டும்தான் இன்னும் என்னை விட்டு நழுவிவருகிறது. நான் நல்ல டச்சில் தானிருக்கிறேன், நான் ரன் எடுக்கவில்லை, மாறாக பார்ம் அவுட் இல்லை. புத்தாண்டிலன் முன்னோட்டமாக இந்தத் தொடரில் ரன்களை எடுப்பேன்.

துணைக்கண்டத்தில் ஆடும்போது அணியில் 2 ஸ்பின்னர்கள் இருப்பார்கள் அப்போது சில தைரியமான முடிவுகளை கேப்டனும் தேர்வாளர்களும் எடுப்பார்கள் அதனை எதிர்நோக்குகிறேன். நானும் ஹாரிசும் அடுத்த 2 டெஸ்ட்களில் ரன்களைக் குவிப்போம்.
Published by:Muthukumar
First published:

Tags: Ashes 2021-22, David Warner, India vs Australia

அடுத்த செய்தி