முன்னாள் ஐசிசி உயர்மட்டக் குழு நடுவர் ஆசாத் ரவுஃப் தனது நடுவர் பணியில் சர்ச்சைக்குரிய முடிவைக் கண்டார். தற்போது லாகூரில் உள்ள லாண்டா பஜாரில் துணிகள் மற்றும் காலணிகளை விற்பனை செய்வதற்காக ஒரு கடை வைத்திருக்கும் 66 வயதான ஆசாத் ரவுஃப் சூதாட்ட புக்கிகளிடம் இருந்து லஞ்சம் வாங்கியதாகவும், ஐபிஎல் 2013 போட்டிகளின் போது பந்தயம் கட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு பிறகு பிசிசிஐ-யால் தடைசெய்யப்பட்டார்.
இது தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் நடுவர் ஆசாத் ரவுஃப் கூறும்போது, “இவர்கள் கூறும் அந்தச் சம்பவம் 2013-ல் நடந்ததாகக் கூறப்பட்டது, 3 ஆண்டுகள் பிசிசிஐ தூங்கிப் போய்விட்டது, திடீரென விழித்துக் கொண்டு 2016-ல் விசாரணை நடத்தியது, எந்தப் புகாரிலும் உண்மை என்ற நிலையிலும் இந்த விசாரணை ஒரு வற்புறுத்தலின் பேரில் நடந்தது.
எனக்கு எதிராக சந்தேகமற எந்த ஒரு ஆதாரத்தையும் பிசிசிஐ-யினால் கொடுக்க முடியவில்லை. அப்போது நீதிபதி சொன்ன வார்த்தைகள் என்னிடம் உள்ளன, ஆசாத்துக்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிகையில் எந்த ஒரு ஆதாரமும், சாட்சியமும் இல்லை. எங்கே? என்று நீதிபதி கேட்டார்.
நான் 2013-லேயே ஐசிசியிடம் என் ராஜினாமாவை சமர்ப்பிப்பதாக தெரிவித்து விட்டேன். எந்த விசாரணை, புகார் என்றாலும் நான் ஐசிசிக்குத்தான் பதில் சொல்ல வேண்டுமே தவிர பிசிசிஐ-க்கு அல்ல. பிசிசிஐ எனக்கு எதிராக ஒருதலைபட்சமாக வழக்கு தொடர விரும்பியது.
என்னைப் பொறுத்தவரை ஐசிசி இந்தச் சூழ்நிலையையோ, புகாரையோ கருத்திலேயே கொள்ளவில்லை. ஏனெனில் இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்பது ஐசிசிக்குத் தெரியும்” என்றார்.
ரவுஃப் 49 டெஸ்ட், 98 ODIகள், 23 T20I கள் மற்றும் எட்டு பெண்கள் T20I களில் நடுவராக இருந்தார். அவரது நடுவர் வாழ்க்கைக்கு முன்பு, அவர் வலது கை பேட்டராகவும் இருந்தார் பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட் சுற்றுகளில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India and Pakistan, IPL