இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின்போது ரிஷப் பந்த் பீல்டிங் செய்யாததன் காரணத்தை பி.சி.சி.ஐ விளக்கியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி 49.1 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்த தொடரில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இதில் பேட் கம்மின்ஸ் வீசிய பந்தை ரிஷப் பந்த் லெக் சைடு தூக்கி அடிக்க முயன்றார். இதில் பேட்டின் விளிம்பில் பந்து பட்டு அவரது ஹெல்மெட்டை பதம் பார்த்தது. அதில், ரிஷப் பந்த் தன்னிலை இழந்தார். பின்னர் அவரை பரிசோதித்த இந்திய அணி மருத்துவர்கள், அவருக்கு மூளையில் அதிர்ச்சி ஏற்பட்டதாக தெரிவித்தனர். இதனால் ரிஷப் பந்த் பீல்டிங் செய்ய வரவில்லை. அவருக்குப் பதிலாக கே.எல்.ராகுல் களம் இறக்கப்பட்டார்.
இந்தப் போட்டியில் ரிஷப் பந்த் பீல்டிங் செய்யாமல் போனதால் ரசிகர்கள் காரணம் தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இந்தநிலையில், இது குறித்த காரணத்தை பி.சி.சி.ஐ தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், ஹெல்மெட்டில் பந்து தாக்கியதன் காரணமாக ரிஷப் பந்த் சிறிது நேரம் தன்னிலை இழந்தார். பந்த் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார் என்று விளக்கமளித்துள்ளது.
Update: Rishabh Pant has got a concussion after being hit on his helmet while batting. KL Rahul is keeping wickets in his absence. Pant is under observation at the moment. #TeamIndia #INDvAUS pic.twitter.com/JkVElMacQc
— BCCI (@BCCI) January 14, 2020
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெறவுள்ள இரண்டாவது ஒருநாள் தொடரில் ரிஷப் பந்த் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்தது. ராஜ்கோட் சென்று இந்திய அணி வீரர்களுடன் பந்த் செல்லவில்லை என்று தகவல்கள் வந்துள்ளன.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rishabh pant