கொரோனா அச்சம் : மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவலகம் மூடப்பட்டது

கொரோனா அச்சம் : மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவலகம் மூடப்பட்டது
சவுரவ் கங்குலி
  • Share this:
கொரேனா அச்சம் காரணமாக மும்பையில் உள்ள பிசிசிஐ-ன் தலைமை அலுவலகம் மூடப்பட்டு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஐ.பி.எல் தொடரும் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் பிசிசிஐ தலைமை அலுவலகம் மூடப்பட்டுள்ளது. ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலைபார்க்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால் 114 பாதிக்கப்பட்டு, 2 பேர் உயிரிழந்துள்ளனர். சர்வதேச அளவில் கொரேனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6500 கடந்தும் 160000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கொரேனா அச்சம் காரணமாக இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒரு நாள் கிரிக்கெட் தொடர் கைவிடப்பட்டுள்ள நிலையில் மற்ற நாடுகள் மோதும் கிரிக்கெட் தொடர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
First published: March 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்