ஐபிஎல்லில் இருந்து டெக்கன் சார்ஜர்ஸ் நீக்கப்பட்ட விவகாரம்: ரூ.4800 கோடி வழங்க பிசிசிஐ-க்கு நடுவர் குழு உத்தரவு..

டெக்கான் சார்ஜர்ஸ் அணி

ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கப்பட்ட டெக்கன் சார்ஜர்ஸ் அணிக்கு 4,800 கோடி ரூபாயை பிசிசிஐ வழங்க நடுவர் குழு உத்தரவிட்டுள்ளது.

 • Share this:
  ஐபிஎல்-ல் இருந்து டெக்கன் சார்ஜர்ஸ் நீக்கப்பட்ட விவகாரத்தில் பிசிசிஐ 4,800 கோடி ரூபாய் வழங்க நடுவர் குழு உத்தரவிட்டுள்ளது.

  2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டபோது, அதில் அங்கம் வகித்த எட்டு அணிகளில் டெக்கன் சார்ஜர்ஸ் ஐதராபாத் அணியும் ஒன்று. 2009-ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற இந்த அணி 2012-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கப்பட்டது.

  தங்களை நீக்கியதில் விதிமீறல் இருப்பதாக மும்பை உயர் நீதிமன்றத்தை டெக்கன் சார்ஜர்ஸ் அணி நாடியது. இது குறித்து விசாரிக்க நடுவர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழு தனது விசாரணையை முடித்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கியது.

  இதில் பிசிசிஐ, டெக்கன் சார்ஜர்ஸ் அணிக்கு 4,800 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
  Published by:Rizwan
  First published: