வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட பிசிசிஐ அனுமதிக்க வேண்டும் - சுரேஷ் ரெய்னா

Suresh Raina | ”வெளிநாட்டு லீக் போட்டியில் விளையாட பிசிசிஐ அனுமதித்தால் ஆட்டத்திறனை மேம்படுத்த முடியும்”

வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட பிசிசிஐ அனுமதிக்க வேண்டும் - சுரேஷ் ரெய்னா
சுரேஷ் ரெய்னா
  • Share this:
பிசிசிஐ-ன் ஒப்பந்த பட்டியலில் இடம்பெறாதவர்களை வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டுமென்று சுரேஷ் ரெய்னா கேட்டுக் கொண்டுள்ளார்.

ஓய்வு பெறாத இந்திய வீரர்களை வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட பிசிசிஐ அனுமதிப்பதில்லை. இதனால், இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காத வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க மாற்றுத்திட்டமில்லை என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இர்பான் பதானுடனான இன்ஸ்டாகிராம் நேரலையின் போது பேசிய சுரேஷ் ரெய்னா, “ஒப்பந்த பட்டியிலில் இல்லாத வீரர்களை வெளிநாட்டு லீக் போட்டியில் விளையாட பிசிசிஐ அனுமதித்தால் ஆட்டத்திறனை மேம்படுத்த முடியும். குறைந்தது 2 லீக் போட்டிகளிலாவது விளையாட அனுமதிக்க வேண்டும்.


நான் இர்பான் பதான், உத்தப்பா ஆகியோர் பிசிசிஐ-ன் ஒப்பந்த பட்டியலில் கிடையாது. நாங்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவில்லை. உள்ளூர் ஐபிஎல் தொடர்களில் மட்டுமே விளையாடி வருகிறோம்.

ஆனால், தேர்வுக்குழுவினர் சில வீரர்களை மட்டுமே வைத்து கொண்டு மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. இதனால் எங்களின் ஆட்டத்திறனை மேம்படுத்த வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும்“ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

First published: May 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading