முகமது ஷமிக்கு விசா தர மறுத்த அமெரிக்கா! களத்தில் இறங்கிய பி.சி.சி.ஐ

அமெரிக்க தூதரகத்தில் விண்ணப்பித்த போது ஷமிக்கு விசா வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

Web Desk | news18
Updated: July 27, 2019, 11:01 PM IST
முகமது ஷமிக்கு விசா தர மறுத்த அமெரிக்கா! களத்தில் இறங்கிய பி.சி.சி.ஐ
முகமது ஷமி
Web Desk | news18
Updated: July 27, 2019, 11:01 PM IST
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு விசா வழங்க அமெரிக்க தூதரகம் மறுப்பு தெரிவித்ததால் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தலையிட்டு விசா பெற்றுத் தந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று  டி-20 போட்டிகள் , 3 ஒரு நாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் இரண்டு டி-20 போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெறவுள்ளன.


ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் அணிக்கு தேர்வாகியுள்ள ஷமி, நாளை மறுநாள் அமெரிக்கா புறப்படும் இந்திய அணியுடன் செல்கிறார்.

இதற்காக, அமெரிக்க தூதரகத்தில் விண்ணப்பித்த போது ஷமிக்கு விசா வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

அவரின் மனைவி கொடுத்த வரதட்சணை புகார் மீதான வழக்கு, நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி மறுக்கப்பட்டது.

Loading...

ஆனால், பிசிசிஐ கேட்டுக்கொண்டதற்கு இணங்க தற்போது முகமது ஷமிக்கு விசா வழங்கப்பட்டுள்ளது.

Also watch: டிக்டாக் குற்றங்களின் கதை! 

First published: July 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...