ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உலகக்கோப்பைக்கான இந்திய அணி குறித்து பிசிசிஐ ஆலோசனை… ஐபிஎல் தொடரை சில வீரர்கள் தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தல்

உலகக்கோப்பைக்கான இந்திய அணி குறித்து பிசிசிஐ ஆலோசனை… ஐபிஎல் தொடரை சில வீரர்கள் தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தல்

இந்திய கிரிக்கெட் அணி

இந்திய கிரிக்கெட் அணி

முக்கிய வீரர்கள் உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதில் பிசிசிஐ ஆர்வம் காட்டுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி குறித்து விவாதிக்க பிசிசிஐ ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதன் அடிப்படையில் சில வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுவார்கள் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆசியக்கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்க முடியாத இந்திய அணி, டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் படுதோல்வியை சந்தித்தது. இதைத் தொடர்ந்து வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது.

இதற்கிடையே, வரும் அக்டோபர் மாதம் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதையொட்டி, உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்து, பிசிசிஐ இன்று ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதில் கேப்டன் ரோகித் சர்மா, தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் விவிஎஸ் லக்ஸ்மன், தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி வீடியோ கான்பரன்ஸ் முறையில் கலந்து கொண்டார்.

கூட்டத்தின்போது உலகக்கோப்பை தொடருக்கு தகுதியான வீரர்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 20 பேர் கொண்ட உத்தேச பட்டியலை பிசிசிஐ உருவாக்கியுள்ளது. குறிப்பாக முக்கிய வீரர்கள் உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதில் பிசிசிஐ ஆர்வம் காட்டுகிறது. இதற்காக, காயம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ள, அல்லது காயத்திலிருந்து சமீபத்தில் மீண்ட வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் அடிப்படையில் ஐபிஎல் கிரிக்கெட் அணிகளுடன் பிசிசிஐ அதிகாரிகள் ஆலோசனை நடத்தவுள்ளனர். இதனைத் தொடர்ந்து உலகக்கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் சில ஐபிஎல் தொடரில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட வாய்ப்புள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் இந்திய அணி… 20 வீரர்கள் அடங்கிய பட்டியல் ரெடி…

உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி 25க்கும் அதிகமான ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. வளர்ந்து வரும் வீரர்களை உள்ளூரில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க வைக்க இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

‘முதல் டெஸ்டில் பாகிஸ்தானை விட நியூசிலாந்து சிறப்பாக விளையாடியது’ – பாக். முன்னாள் வீரர் கருத்து…

வீரர்களின் உடல் தகுதிக்காக யோயோ மற்றும் டெக்சா முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Cricket