Home /News /sports /

இங்கிலாந்து புறப்பட்ட இந்திய அணி- ரோஹித் சர்மா எங்கே?

இங்கிலாந்து புறப்பட்ட இந்திய அணி- ரோஹித் சர்மா எங்கே?

ரோகித் சர்மா கேப்டன்

ரோகித் சர்மா கேப்டன்

இங்கிலாந்தில் மாற்றியமைக்கப்பட்ட தேதியில் ஆடப்படும் 5வது டெஸ்ட் போட்டிக்காக இங்கிலாந்து புறப்பட்ட இந்திய அணியின் புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட ரோஹித் சர்மா எங்கே என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்திய அணி புறப்படுவதற்கு முன்னதாக புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர். விராட் கோலி, முகமது சிராஜ், சேதேஷ்வர் புஜாரா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் படத்தில் காணக்கூடிய வீரர்களில் அடங்குவர், குறிப்பாக, சமீபத்தில் முடிவடைந்த இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 சீசனில் காயத்தால் பாதிக்கப்பட்ட ரவீந்திர ஜடேஜாவும் படத்தில் இருந்தார், ஆனால் கேப்டன் ரோஹித் சர்மாவைக் காணோம்.

    கோலி, ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஷுப்மான் கில், பிரசித் கிருஷ்ணா மற்றும் கே.எஸ்.பரத் ஆகியோருடன் ஒரு படத்தைப் புஜாராவும் சமூக ஊடகங்களில் பகிர்ந்தார்.

    "அடுத்த சவாலுக்குத் தயார், UK செல்கிறோம்!" என்று புஜாரா புகைப்படத்திற்கு தலைப்பிட்டுள்ளார். பிசிசிஐயால் பகிரப்பட்ட படங்களில் கேப்டன் ரோஹித் சர்மாவைக் காணவில்லை என்று பல பயனர்கள் அவரைப் பற்றி கேட்கத் தொடங்கினர்.

    "முக்கிய நபர் எங்கே?" ஒரு பயனர் ட்வீட் செய்துள்ளார். "கேப்டன் எங்கே?" இன்னொருவர் கேட்டார். இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடைபெறுகிறது
    Published by:Muthukumar
    First published:

    Tags: India Vs England, Rohit sharma

    அடுத்த செய்தி