அணிக்கு மீண்டும் திரும்புகிறாரா தோனி..? பிசிசிஐ பகிர்ந்த புகைப்படத்தால் ரசிகர்கள் உற்சாகம்

அணிக்கு மீண்டும் திரும்புகிறாரா தோனி..? பிசிசிஐ பகிர்ந்த புகைப்படத்தால் ரசிகர்கள் உற்சாகம்
மகேந்திர சிங் தோனி
  • Share this:
பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் மகேந்திர சிங் தோனியின் பழைய புகைப்படத்தை பதிவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச அளிவிலான கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடர் ரத்து செய்யப்பட்டும் ஐ.பி.எல் தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு பின் இந்திய அணியில் இடம்பெறாத தோனி, ஐ.பி.எல் போட்டியில் விளையாடுவதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். சேப்பாக்கம் மைதானத்தில் மகேந்திர சிங் தோனி மற்றும் சி.எஸ்.கே வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தனர்.


கொரோனா வைரஸ் காரணமாக ஐ.பி.எல் தொடர் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரும் ஐ.பி.எல் தொடர் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதனால் தோனி ரசிகர் மிகவும் கவலையில் இருந்த நிலையில் பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் தோனியின் பழைய புகைப்படத்தை பதிவிட்டுள்ளது.மேலும் “வாழ்வதற்கான வழி புன்னகை தான்“ என்றும் பதிவிட்டுள்ளது. பிசிசிஐ-ன் இந்த பதவின் மூலம் தோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப உள்ளாரா என்று அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
First published: March 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading