ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஸ்மைல் ப்ளீஸ்.. ஆஸ்திரேலியா செல்லும் இந்தியப்படை - புகைப்படம் வெளியிட்ட பிசிசிஐ

ஸ்மைல் ப்ளீஸ்.. ஆஸ்திரேலியா செல்லும் இந்தியப்படை - புகைப்படம் வெளியிட்ட பிசிசிஐ

இந்திய கிரிகெட் அணி

இந்திய கிரிகெட் அணி

இம்முறை இந்திய அணி தனது டெத் பவுளிங்கில் கவனம் செலுத்த வேண்டும். பும்ராவும் இல்லாதது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  நடக்கவிருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு இந்தியா அணி இன்று காலை ஆஸ்திரேலியா கிளம்பியுள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு கிளம்பும் முன் எடுத்த புகைப்படத்தை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

  கடந்த 2007 யில் டி20 கோப்பையை வென்ற இந்திய அணி, அதற்கு பிறகு கோப்பையை வெல்லவில்லை. ஆனால் இந்த முறை உலக கோப்பைக்கு தயார் ஆகும் வகையில் ஆஸ்திரேலியாவுடனும் தென் ஆப்பிரிக்காவுடனும் மோதிய தொடர்களில் வென்றுள்ளது இந்திய அணி. இந்திய மண்ணில் இந்த தொடர்களில் வென்றுக்கலாம், ஆனால் ஆஸ்திரேலிய மண்ணில் அதை வெல்வது சுலபமில்லை என்பது விமர்சகர்களின் வாதமாக இருக்கிறது.

  இம்முறை இந்திய அணி தனது டெத் பவுளிங்கில் கவனம் செலுத்த வேண்டும். பும்ராவும் இல்லாதது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அணியின் பேட்டிங் வரிசை சற்று நிம்மதியை கொடுத்தாலும், இன்னுமும் அணியில் தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், இவர்களில் யாரை விளையாட வைக்கலாம் என்பதில் குழப்பம் நிலவுகிறது. ஹர்திக் பாண்டியாவிற்கு சரியான மாற்று வீரர் அணியில் இல்லை. இதனால் ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் ஏற்பட்டால் அணியில் குழப்பம் ஏற்படும் நிலை தான் உள்ளது.

  பும்ராவிற்கு பதில்  டி20தொடரில்  அனுபவம் வாயந்த ஷமி சேர்க்கப்படுவாரா இல்லை இளம்கன்று பயம் அறியாது என சிராஜிற்கு வாய்ப்பளிக்கப்படுமா என்பதை இன்னும் தெரியவில்லை.  இந்திய அணி கடந்த முறை  அரைஇறுதி வரை சென்ற நிலையில் இம்முறை கோப்பையை வெல்லுமா என்பதே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது. ஆஸ்திரேலியா புறபட்ட இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: BCCI, Cricket, Indian cricket team, T20 World Cup