• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஐ.பி.எல் போட்டி மூலம் ராணுவ நல நிதிக்கு ரூ.20 கோடி.. பிசிசிஐ திட்டம்!

ஐ.பி.எல் போட்டி மூலம் ராணுவ நல நிதிக்கு ரூ.20 கோடி.. பிசிசிஐ திட்டம்!

து தொடர்பாக அணியின் நிர்வாக மேலாளர் சுனில் சுப்ரமணியத்திடம் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளது.

து தொடர்பாக அணியின் நிர்வாக மேலாளர் சுனில் சுப்ரமணியத்திடம் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளது.

#BCCI set to donate INR 20 crore to armed forces during #IPL2019 | ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நடப்பாண்டு ஐ.பி.எல் தொடரின் தொடக்க விழா கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஐ.பி.எல் தொடரின் தொடக்க போட்டியின் மூலம் ராணுவ நல நிதிக்காக ரூ.20 கோடி கொடுக்க பி.சி.சி.ஐ திட்டமிட்டுள்ளது.

    2019-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் மார்ச் 23-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் தொடக்கப் போட்டி நடைபெற உள்ளது.

    CSK Return
    மைதானத்தில் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (CSK)


    கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் முதல் போட்டியில் பலப்பரீட்சை நடந்துகின்றன. இதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் சில மணி நேரங்களில் விற்று தீர்ந்தன.

    கடந்த பிப்ரவரி 14-ம் தேதி பும்வாமாவில் தீவிரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நடப்பாண்டு ஐ.பி.எல் தொடரின் தொடக்க விழா கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டது.

    IPL opening ceremony,
    ஐ.பி.எல் தொடக்க விழா. (IPL)


    தொடக்க விழாவுக்கு கடந்த ஆண்டு ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த தொகையுடன் சேர்த்து சுமார் ரூ.20 கோடியை ராணுவ நல நிதியாக அளிக்க பி.சி.சி.ஐ திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “தொடக்க போட்டியின்போது தோனி மற்றும் கோலி ஆகியோர் இணைந்து இந்த நிதியின் ஒரு பகுதியை வழங்க உள்ளனர்” என்று தெரிவித்தார்.

    Also Watch...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesan L
    First published: