• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Asia XI டி20 அணிக்கான 4 இந்திய வீரர்களை அறவித்தது பிசிசிஐ

Asia XI டி20 அணிக்கான 4 இந்திய வீரர்களை அறவித்தது பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணி. (BCCI)

இந்திய கிரிக்கெட் அணி. (BCCI)

  • Share this:
    உலக லெவன் அணிக்கு எதிரான ஆசிய லெவன் போட்டியில் பங்கேற்க உள்ள 4 இந்திய வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.

    வங்கதேச்தில் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உலக லெவன் மற்றும் ஆசிய லெவன் அணிக்கு இடையேயான போட்டி டாக்காவில் மார்ச் 18 மற்றும் 21 தேதிகளில் நடைபெற உள்ளது.

    இந்த போட்டியில் பங்கேற்க வருமாரு பிசிசிஐ-க்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து ஆசிய லெவன் அணியில் விளையாட கோலி, முஹமது ஷமி, குல்திப் யாதவ் மற்றும் ஷிகார் தவான் பெயரை அறிவித்துள்ளது. இவர்களின் பெயரை பிசிசிஐ வங்கதேச கிரிக்கெட் நிர்வாகத்திற்கு அனுப்பி உள்ளதாக கங்குலி கூறி உள்ளார்.

    ஆசிய லெவன் அணியில் பாகிஸ்தான் அணி வீரர்களுடன் இந்திய அணி வீரர்கள் இணைந்து விளையாடுவார்களா என்ற கேள்வியும் எழுந்தது. இதற்கு பிசிசிஐ இணை செயலாளர் ஜெய்ஷ் ஜார்ஜ் அளித்துள்ள விளக்கத்தில், “பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆசிய லெவன் போட்டிக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஆகவே இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் இணைந்து இந்த போட்டியில் விளையாடமாட்டார்கள்“ என்றுள்ளார்.

    இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அளித்துள்ள விளக்கத்தில், “பாகிஸ்தான் வீரர்கள் உள்ளூர் போட்டியான பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுகின்றனர். இந்த தொடர் மார்ச் 22ம் தேதி தான் முடிவடைகிறது. பாகிஸ்தான் வீரர்கள் பிசியாக இருப்பதால் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நாங்கள் நிகாரித்துவிட்டோம்“ என்றுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: