பாகிஸ்தான் போட்டி குறித்து பிசிசிஐ கூட்டத்தில் எடுக்கப்பட்ட 2 அதிரடி முடிவுகள்!

#BCCI send a letter to ICC raising our concerns about Pakistan: COA chief #VinodRai | பிசிசிஐ நிர்வாகக்குழு உறுப்பினர்கள் 3 பேர் நேரடியாகவும், மற்ற உறுப்பினர்கள் தொலைபேசி வாயிலாகவும் பங்கேற்றனர். #INDvPAK

news18
Updated: February 22, 2019, 3:40 PM IST
பாகிஸ்தான் போட்டி குறித்து பிசிசிஐ கூட்டத்தில் எடுக்கப்பட்ட 2 அதிரடி முடிவுகள்!
பிசிசிஐ நிர்வாகக்குழு. (PTI)
news18
Updated: February 22, 2019, 3:40 PM IST
உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது குறித்து இன்று டெல்லியில் நடத்த பிசிசிஐ ஆலோசனை கூட்டத்தில் 2 அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

புல்வாமா வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடக்கூடாது என்று முன்னாள் வீரர்கள் கவாஸ்கர், கங்குலி, ஹர்பஜன் உள்ளிட்ட பலர் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், பாகிஸ்தானுடன் விளையாடா விட்டால் புள்ளிகளை இழக்க நேரிடும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

BCCI, PCB, ICC, இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள். (AFP)


இதற்கிடையே, பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ரோஹ்ரி, ஐசிசிக்கு எழுதிய கடிதத்தில், பாகிஸ்தான் அணியை உலகக்கோப்பையில் இருந்து தடை செய்யுமாறு கோரியுள்ளார். ஆனால், இதற்கு மற்ற அணிகள் ஒப்புக்கொள்ளுமா எனத் தெரியவில்லை.

இந்நிலையில், பல்வேறு கேள்விகளுக்கு மத்தியில் இன்று டெல்லியில் பிசிசிஐ ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பிசிசிஐ நிர்வாகக்குழு உறுப்பினர்கள் 3 பேர் நேரடியாகவும், மற்ற உறுப்பினர்கள் தொலைபேசி வாயிலாகவும் பங்கேற்றனர்.

ஆலோசனை முடிந்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய், இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

bcci, vinod rai, பிசிசிஐ
பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய். (Getty Images)
Loading...
“முதல் முடிவு, பாகிஸ்தான் உடனான பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து ஐசிசிக்கு கடிதம் எழுதியுள்ளோம். 2-வதாக இனிமேல் தீவிரவாத தொடர்பு வைத்திருக்கும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் நேரடி போட்டிகளை திட்டமிட வேண்டாம் என்று கூறியுள்ளோம்,” என வினோத் ராய் தெரிவித்தார்.

பாகிஸ்தானால் வந்த ஆபத்து.. இந்தியாவுக்கு சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு தடை!

Also Watch...

First published: February 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...