Home /News /sports /

மாற்றுத் திறனாளிகளுக்கான HAP கோப்பை கிரிக்கெட்: 2வது தொடர் ஜெய் ஷா தொடங்கி வைப்பு

மாற்றுத் திறனாளிகளுக்கான HAP கோப்பை கிரிக்கெட்: 2வது தொடர் ஜெய் ஷா தொடங்கி வைப்பு

பிசிசிஐ செயலர் ஜெய் ஷா

பிசிசிஐ செயலர் ஜெய் ஷா

நாட்டின் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் கமிட்டியை தொடங்கியதில் பங்காற்றிய பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, இப்போது மாற்றுத் திறனாளிகளுக்கான HAP கோப்பை கிரிக்கெட் 2வது தொடரை தொடங்கி வைத்தார்.

    நாட்டின் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் கமிட்டியை தொடங்கியதில் பங்காற்றிய பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, இப்போது மாற்றுத் திறனாளிகளுக்கான HAP கோப்பை கிரிக்கெட் 2வது தொடரை தொடங்கி வைத்தார்.

    மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களுக்கான பெரிய கிரிக்கெட் தொடராகும் இந்த ஹெச்ஏபி. கோப்பை தொடர். சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆண்டு பொதுக்கூட்டத்தில் இதற்கான கமிட்டியை பிசிசிஐ அமைத்தது.

    ஹரியாணாவின் பஞ்ச்குலாவில் டிசம்பர் 28-ம் தேதி முதல் 31ம் தேதி வரை தாவ் தேவிலால் ஸ்டேடியத்தில் ஹெச்.ஏ.பி. கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அமைப்பு (PCCAI) இந்தத் தொடரை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. அதாவது மாற்றுத்திறனாளிகளிடையே மகிழ்ச்சியையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்.

    இந்த முறையும் 2019 வேர்ல்ட் சீரிஸ் வின்னர்கள் உட்பட டாப் வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர். 4 அணிகளாகப் பிரிக்கப்பட்டு ரவுண்ட் ராபின் முறையில் ஆடி, டாப் 2 அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். கொரோனா வைரஸ் லாக் டவுன் காலக்கட்டத்தில் 500 மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம் வழங்கிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆர்வலர்கள் 4 பேர் பெயரில் 4 அணிகள் இறங்கும்.

    இதையும் படிங்க: ரோகித் சர்மா, ஷுப்மன் கில், பிரிதிவி ஷா-வுக்கு முன்னரே வர வேண்டிய பிரியங்க் பஞ்சல்- அநீதிகளின் தொடர்கதை

    ஆஸ்திரேலிய லெஜண்ட் ஸ்வீட் வாஹ் இத்தகைய சமூக நல மனம் படைத்தவர். இவரது மேனேஜர் ஹார்லி மெட்காஃப் என்பவர் இத்தகைய நபர்களில் ஒருவர். மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்டுக்காக ஒரு கமிட்டியை உருவாக்கியதன் மூலம் கடந்த கால, நடப்பு, எதிர்கால மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியதற்காக அவருக்கு நன்றி என்று மாற்றுத்திறனாளி கிரிக்கெட் சங்க பொதுச்செயலாளர் ரவி சவுகான் தெரிவித்தார்
    Published by:Muthukumar
    First published:

    Tags: BCCI

    அடுத்த செய்தி