• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • எப்படி கசிந்தது மிதாலி ராஜ் அனுப்பிய இமெயில்?: பிசிசிஐ கேள்வி!

எப்படி கசிந்தது மிதாலி ராஜ் அனுப்பிய இமெயில்?: பிசிசிஐ கேள்வி!

மிதாலி ராஜ் (Getty)

மிதாலி ராஜ் (Getty)

How Mithali Raj's Email Got Leaked To Media | பயிற்சியாளர் பவார், நிர்வாகக்குழு உறுப்பினர் டயானா எடுல்ஜி ஆகியோர் தன்னை அணியில் இருந்து நீக்கிவிட்டதாக மிதாலி ராஜ் இமெயில் அனுப்பியிருந்தார். #MithaliRaj

  • News18
  • Last Updated :
  • Share this:
    மிதாலி ராஜ், பிசிசிஐ-க்கு அனுப்பிய இமெயிலில் உள்ள விபரங்கள் எப்படி ஊடங்களுக்கு கசிந்தன என்று பிசிசிஐ பொறுப்புச் செயலாளர் அமிதாப் சவுத்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.

    மகளிர் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியின்போது முன்னணி வீராங்கனை மிதாலி ராஜ் அணியில் சேர்க்கப்படாதது குறித்து பல்வேறு சர்ச்சையான செய்திகள் வெளியாகின. இதனை அடுத்து, இந்திய அணியின் கேப்டனான ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் மிதாலி ராஜ் ஆகியோரிடம் பிசிசிஐ அதிகாரிகள் தனித்தனியாக விளக்கம் கேட்டனர்.

    அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து பிசிசிஐக்கு மிதாலி ராஜ் இமெயில் அனுப்பினார். அதில், “அதிகாரத்தில் உள்ள சிலரது நடவடிக்கைகளால் நான் அவமானப்படுத்தப்பட்டேன். பயிற்சியாளர் ரமேஷ் பவார் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர் டயானா எடுல்ஜி ஆகியோர் தங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி, என்னை அணியில் இருந்து நீக்கிவிட்டனர்.” என்று தெரிவித்திருந்தார்.

    Ramesh Powar, Mithali Raj, BCCI
    பயிற்சியாளர் பவாருடன் மிதாலி ராஜ் (BCCI)


    மிதாலி ராஜ் நீக்கப்பட்ட சம்பவமும், அதற்குப் பின்னணியில் இருக்கும் சம்பவங்களும் இந்திய கிரிக்கெட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிசிசிஐ-க்கு மிதாலி ராஜ் அனுப்பிய இமெயில் எப்படி ஊடகங்களுக்கு தெரிந்தது என்று புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இதுகுறித்து, பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி மற்றும் மேலாளர் சபா கரிம் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என பொறுப்புச் செயலாளர் அமிதாப் சவுத்ரி கூறியுள்ளார்.

    Also See...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesan L
    First published: