Home /News /sports /

பிட்சுக்கு தண்ணி காட்டாதீங்க, ரோலர் போடாதீங்க முதல் பந்திலேயே பிட்ச் உடையனும்- பிசிசிஐ உத்தரவு அம்பலம்

பிட்சுக்கு தண்ணி காட்டாதீங்க, ரோலர் போடாதீங்க முதல் பந்திலேயே பிட்ச் உடையனும்- பிசிசிஐ உத்தரவு அம்பலம்

சென்னை சேப்பாக்கம்

சென்னை சேப்பாக்கம்

ஆஸ்திரேலியாவில் ரகானே கேப்டன்சியில் பிரமாதமாக ஆஸ்திரேலியாவை அதன் மண்ணிலேயே வீழ்த்திய பெருமை கொண்ட இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிரான உள்நாட்டுத் தொடரில் சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியை எதிர்கொண்டது, இந்தப் போட்டிக்கு முன் பிட்ச் தயாரிப்பாளரிடம் பிட்சிற்கு தண்ணி காட்ட வேண்டாம், ரோலரும் போட வேண்டாம், அப்போதுதான் முதல் பந்திலிருந்தே பந்துகள் ஸ்கொயராகத் திரும்பும் என்று உத்தரவிடப்பட்டது அம்பலமாகியுள்ளது,

மேலும் படிக்கவும் ...
  ஆஸ்திரேலியாவில் ரகானே கேப்டன்சியில் பிரமாதமாக ஆஸ்திரேலியாவை அதன் மண்ணிலேயே வீழ்த்திய பெருமை கொண்ட இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிரான உள்நாட்டுத் தொடரில் சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியை எதிர்கொண்டது, இந்தப் போட்டிக்கு முன் பிட்ச் தயாரிப்பாளரிடம் பிட்சிற்கு தண்ணி காட்ட வேண்டாம், ரோலரும் போட வேண்டாம், அப்போதுதான் முதல் பந்திலிருந்தே பந்துகள் ஸ்கொயராகத் திரும்பும் என்று உத்தரவிடப்பட்டது அம்பலமாகியுள்ளது, ஆனால் வழக்கம் போல் ‘அப்படியெல்லாம் இல்லை’ என்று பிசிசிஐ மறுத்துள்ளது.

  அது காஞ்சு கருவாடாக இருக்கட்டும், அப்பதான் பிட்ச் பாளம் பாளமா வெடிச்சு முதல் பந்தே பாயிண்டில் பிட்ச் ஆகி ஆஃப் ஸ்ட்ம்பை பெயர்க்கும், இதுதான் இந்திய பிட்ச்களின் லட்சணம், இதைச்சொன்னால் அங்கு கிரீன் டாப் போடுகின்றனரே என்று பிதற்றித் தள்ள கும்பல் ஒன்று பழைய உருட்டுடன் கிளம்பி வரும். கிரீன் டாப் பிட்சில் நல்ல டெக்னிக் இருந்தால் ஆட முடியும், இவர்களுக்கு டெக்னிக் இல்லாமல் எட்ஜ் செய்து விட்டு வந்து இங்கு குழிப்பிட்சை போட்டு பெரிய பெரிய அணிகளையெல்லாம் மண்ணைக் கவ்வச்செய்து விட்டு மார்தட்டிக் கொள்வதுதான் நடந்திருக்கிறது.

  இந்நிலையில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் முதல் டெஸ்ட் போட்டியை சென்னை சேப்பாக்கத்தில் வென்று 1-0 என்று முன்னிலை பெற்ற டெஸ்ட் போட்டியின் பிட்சைத் தயாரித்த தபோஷ் சாட்டர்ஜி பிசிசிஐ-யின் இந்தக் குழிப்பிட்ச் உத்தரவுக்கு இணங்கவில்லை என்று செய்திகள் கிளம்பியுள்ளன, அதனால்தான் ஜோ ரூட் டபுள் செஞ்சுரி அடிக்க இந்திய அணி அந்த டெஸ்ட் போட்டியில் தோற்றது.

  உடனே கோலி -ரவிசாஸ்திரி அண்ட் கோ விடுமா, உறுமியது, முறைத்தது, எனக்கு அடுத்து பிட்ச் உடைய வேண்டும் என்று கேட்க 2வது சென்னை டெஸ்ட்டில் மிக மோசமான பிட்ச் போடப்பட்டதோடு அடுத்தடுத்து படுகுழி பிட்ச்களைப் போட்டு இங்கிலாந்தை அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் வென்றது, அதுவும் அகமதாபாத் பகலிரவு பிங்க் பந்து டெஸ்ட் போட்டி 2 நாட்களில் முடிந்தது, காரணம், இருட்டு மற்றும் குழிப்பிட்ச் கலவைதான்.

  இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் அன்று பிசிசிஐ-யின் உத்தரவுக்குக் கீழ்படியாத பிட்ச் கியூரேட்டர் சாட்டர்ஜி அடுத்த டெஸ்ட்டுக்கு இல்லை. ஆனால் இந்த விவகாரத்தை விசாரிக்கப் போவதில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

  இந்த சென்னை டெஸ்ட் போட்டியில் இடப்பட்ட பிட்ச் மோசமானது என்று ரேட் செய்யப்பட்டால் இந்தியாவுக்கு ஐசிசி டெஸ்ட் சாம்பியன் புள்ளிகள் இழப்பு ஏற்பட்டிருக்கும், ஆனால் தன் பணபலத்தை வைத்து இந்த சிக்கலிலிருந்து மீண்டு வந்தது பிசிசிஐ.

  ஒருமுறை தென் ஆப்பிரிக்கா ஒருநாள் போட்டி ஒன்றில் 400 ரன்களுக்கும் மேல் குவிக்க ரவி சாஸ்திரி மேலேயிருந்து பிட்ச் கியுரேட்டரைப் பார்த்து கடும் வசைமொழியை பயன்படுத்தியது தொலைக்காட்சியிலேயே அனைவரும் கண்டது.

  பணமழை பிசிசிஐ கிரிக்கெட்டை வளர்ப்பதை விடுத்து இப்படிப்பட்ட குழிப்பிட்ச்களை போட்டு அதில் வெற்றிகளைக் குவித்து இந்தச் சாதனைகளையெல்லாம் மார்தட்டுகிறது என்பதை நினைக்கும் போது இப்போது ராகுல் திராவிட் பயிற்சியின் கீழ் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றே கூற வேண்டும்.
  Published by:Muthukumar
  First published:

  Tags: Chepauk, India Vs England

  அடுத்த செய்தி