முகப்பு /செய்தி /விளையாட்டு / இந்தியாவுக்கு வருகை தரும் இரண்டு டாப் அணிகள்- முழு அட்டவணை

இந்தியாவுக்கு வருகை தரும் இரண்டு டாப் அணிகள்- முழு அட்டவணை

இந்திய அணி

இந்திய அணி

உலகக்கோப்பை டி20 தொடருக்காக ஆஸ்திரேலியா செல்வதற்கு முன்பாக இந்திய அணி இங்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுடன் டி20 போட்டிகளில் மோதுகின்றன.

  • 1-MIN READ
  • Last Updated :

உலகக்கோப்பை டி20 தொடருக்காக ஆஸ்திரேலியா செல்வதற்கு முன்பாக இந்திய அணி இங்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுடன் டி20 போட்டிகளில் மோதுகின்றன.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொஹாலியில் செப்டம்பர் 20ம் தேதியும், நாக்பூரில் செப்.23ம் தேதியும், ஹைதராபாத்தில் செப்டம்பர் 25ம் தேதியும் இந்திய அணி ஆடுகின்றன.

உடனேயே செப்டம்பர் 28ம் தேதி தென் ஆப்பிரிக்காவுடன் திருவனந்தபுரத்திலும், குவஹாத்தியில் அக்டோபர் 1ம் தேதியும், இந்தூரில் அக்டோபர் 3ம் தேதியும் இந்திய அணி டி20 போட்டிகளில் மோதுகின்றது.

3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் ராஞ்சியில் அக்டோபர் 6, லக்னோவில் அக்டோபர் 9, டெல்லியில் அக்டோபர் 11ம் தேதியும் நடைபெறுகின்றன.

அதாவது உலக டி20 போட்டிக்கு ஓரு இந்திய டி20 அணி புறப்பட்டு செல்லும் அதே வேளையில் ஒருநாள் போட்டிகளுக்கு தனியான் ஒரு அணி திட்டமிடப்பட்டுள்ளது.

போட்டி அட்டவணை:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20:

செப்.20- மொஹாலி

செப்.23 - நாக்பூர்

செப்.25- ஹைதராபாத்

----

தென் ஆப்பிரிக்கா டி20:

செப்.28- திருவனந்தபுரம்

அக்.1 - குவாஹாத்தி

அக்.3- இந்தூர்

--------

தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடர்:

அக்டோபர் 6- ராஞ்சி

அக்டோபர் 9- லக்னோ

அக்டோபர் 11- டெல்லி

First published:

Tags: India, India vs west indies