உலகக்கோப்பையில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்களின் பணிச்சுமையை குறைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ செயல்திறன் ஆய்வு கூட்டத்தில், 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு ஆயத்தமாகும் வகையில் 20 வீரர்கள் கொண்ட உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டது.
இதையடுத்து, வீரர்களுக்கு காயம் ஏற்படக்கூடாது என்பதற்காக பிசிசிஐ பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, ஐசிசி உலக கோப்பையை முன்னிட்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களை கண்காணிக்க, ஐபிஎல் உரிமையாளர்களுடன், என்சிஏ இணைந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முன்னணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடுவதை தவிர்க்கும்படி கேட்டுகொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்த்திக் பாண்டியா உள்ளிட்ட வீரர்கள் ஐபிஎல் தொடரில் முழுமையாக பங்கேற்பது சந்தேகம் என கூறப்படுகிறது. உலககோப்பைக்கு தயார் படுத்தும் வகையில் இந்த முடிவு இருந்தாலும், பெரும் ரசிகர் பட்டாளம் கொண்ட ஐபிஎல் தொடரில் தங்களுக்கு பிடித்த வீரர்கள் முழுமையாக விளையாடாதது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BCCI, ICC world cup, India captain Rohit Sharma, Indian cricket team, IPL, Virat Kohli