தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதியை வெளியிட்டது பிசிசிஐ!

ரவிசாஸ்திரி மீண்டும் விண்ணப்பிக்கலாம் என பி.சி.சி.ஐ கூறியுள்ளதால், தலைமைப் பயிற்சியாளர் பதவி மீண்டும் அவருக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay R | news18
Updated: July 16, 2019, 8:10 PM IST
தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதியை வெளியிட்டது பிசிசிஐ!
கோப்பு படம்
Vijay R | news18
Updated: July 16, 2019, 8:10 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர்க்கு விண்ணப்பிக்க என்னென்ன அடிப்படைத் தகுதிகள் வேண்டுமென்பதை பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர், பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதர் ஆகியோர் உள்ளனர். இவர்களின் பதவிகாலம் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடருடன் முடிவடைய உள்ளது.

உலகக் கோப்பைத் தொடர் காரணமாக இவர்களது பதவிக்காலம் 45 நாள் நீட்டிக்கப்பட்டதால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்கும் இவர்களே பயிற்சியாளர்களாக தொடர்வார்கள். இந்நிலையில் புதிய பயிற்சியாளர்களுக்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதி வேண்டுமென பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.


தலைமைப் பயிற்சியாளராக விண்ணப்பிக்க உள்ளவர்கள், 60 வயதுக்கு குறைவானவர்களாக இருக்க வேண்டும். டெஸ்ட் போட்டிகள் விளையாடும் நாட்டுக்கு குறைந்தது 2 ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்திருக்க வேண்டும் அல்லது ஐ.பி.எல் அணியிலோ, சர்வதேச ஏ அணியிலோ மூன்று ஆண்டுகள் உறுப்பினர்களாக இருந்திருக்க வேண்டும். அவர்களும் குறைந்தது 30 டெஸ்ட் போட்டி அல்லது 50 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும் என பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

புதிய பயிற்சியாளர்கள் பதவிக்கு ஜூலை 30, மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ரவிசாஸ்திரி மீண்டும் விண்ணப்பிக்கலாம் என பி.சி.சி.ஐ கூறியுள்ளதால், தலைமைப் பயிற்சியாளர் பதவி மீண்டும் அவருக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த கும்ளே இடையிலையே பதவி விலகியதைத் தொடர்ந்து ரவி சாஸ்திரி கடந்த 2017-ம் ஆண்டு பதவியேற்றார் என்பது குறிப்பிடதக்கது.

Loading...

Also Read :சச்சின் வெளியிட்ட உலக லெவன் அணியில் 5 இந்திய வீரர்கள்...! தோனிக்கு இடமில்லை

Also Watch

First published: July 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...