யுவராஜ் சிங்கை பெருமைப்படுத்தும் விதமாக பிசிசிஐ வெளியிட்ட மாஸ் வீடியோ!

யுவராஜ் சிங்

Yuvaraj Singh | BCCI | Team India | இங்கிலாந்தில் 2002ம் ஆண்டு நடைபெற்ற இந்த போட்டியின் கடைசி ஓவர் வீடியோவை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்து.

  • News18
  • Last Updated :
  • Share this:
யுவராஜ் சிங் ஓய்வு அறிவித்த நிலையில் அவரை பெருமைப்படுத்தும் வகையில் பி.சி.சி.ஐ தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்திய அணியின் தலைசிறந்த ஆல்ரவுண்டராக வலம் வந்தவர் யுவராஜ் சிங். 2007 டி20 மற்றும் 2011 உலகக் கோப்பையை வெல்ல முக்கிய வீரராக இருந்தவர் யவராஜ் சிங்.

இந்திய அணியை பல முறை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற யுவராஜ் சிங் பெயரை சொன்னாலே நம் கண்முன் வரும் போட்டிகளில் ஒன்று இங்கிலாந்தில் நடைபெற்ற நாட்வெஸ்ட் முத்தரப்பு தொடர்.

இங்கிலாந்து, இந்தியா, இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகள் பங்குபெற்ற முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்தது.



கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 146 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தோல்வியின் எல்லைக்கே சென்றது. கங்குலி, சச்சின், சேவாக், டிராவிட் என முக்கிய வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில் யுவராஜ் - கைப் ஜோடி அணியை தோல்வியிலிருந்து மீட்டது.

இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி யுவராஜ் 9 பவுண்டரி, 1 சிக்சர் என 69 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். கடைசி ஓவரில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. வெற்றியை கொண்டாடும் வகையில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கங்குலி ஜெர்சியை கழற்றி சுற்றியது இன்று வரை யாராலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு.



இங்கிலாந்தில் 2002-ம் ஆண்டு நடைபெற்ற இந்த போட்டியின் கடைசி ஓவர் வீடியோவை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த யுவராஜை பெருமைப்படுத்தி உள்ளது.

Also Watch

Published by:Vijay R
First published: