• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • அர்ஜுனா விருதுக்கு மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனையை பரிந்துரைத்த பிசிசிஐ!

அர்ஜுனா விருதுக்கு மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனையை பரிந்துரைத்த பிசிசிஐ!

பூனம் யாதவ்

பூனம் யாதவ்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை பூனம் யாதவ் உள்ளிட்ட 4 பேரின் பெயர்களை அர்ஜுனா விருதுக்கு பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.

விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆண்டு தோறும் அர்ஜுனா விருதுகள் உள்ளிட்ட பல விருதுகள் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரின் பெயர்களை பரிந்துரை செய்துள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை பூனம் யாதவ் பெயரையும் பரிந்துரை செய்துள்ளது.

முதல்முறையாக மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனாவுக்கு கடந்த ஆண்டு அர்ஜுனா விருது வழங்கப்பட்ட நிலையில், தற்போது பூனம் யாதவ் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilarasu J
First published: