பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு திடீர் உடல்நலக்குறைவு... மருத்துவமனையில் அனுமதி

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு திடீர் உடல்நலக்குறைவு... மருத்துவமனையில் அனுமதி

சவுரவ் கங்குலி

 • Share this:
  இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  கொல்கத்தாவில் பெஹலாவில் உள்ள தனது வீட்டில் உடற்பயிற்சி செய்துக் கொண்டிருக்கும் போது சவுரவ் கங்குலிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் உடனடியாக உட்லேண்டில் உள்ள மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.  சவுரவ் கங்குலிக்கு மாரடபை்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் சவுரவ் கங்குலிக்கு மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அவரது உடல்நல குறித்த முழு தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
  Published by:Vijay R
  First published: