• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • கோடிக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்த்த இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்ஸி அறிமுகப்படுத்திய பி.சி.சி.ஐ

கோடிக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்த்த இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்ஸி அறிமுகப்படுத்திய பி.சி.சி.ஐ

இந்திய வீரர்கள்

இந்திய வீரர்கள்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கான புதிய ஜெர்சியை பி.சி.சி.ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

  • Share this:
    டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை அக்டோபர் 24 ல் எதிர்கொள்கிறது .

    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் சேர்க்கப்படலாம் என எதிர்பாரக்கப்பட்டது. ஹர்திக் பாண்டியா உடல் நிலை குறித்து கேள்விகள் எழுந்து வந்தன. மேலும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய அவேஷ் கான் மற்றும் வெங்கடேஷ் ஐயர் அணியில் இடம்பிடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் வீரர்கள் குறித்து இறுதி அறிவிப்பு அந்தந்த அணிகள் அக்டோபர் 15-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி அறிவித்து இருந்தது.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெற்றிருந்த அக்ஷர் படேலுக்கு பதிலாக சர்துல் தாகூர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. உலகக் கோப்பை தொடரின் போது இந்திய அணிக்கு புது ஜெர்சி வழங்குவது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் இந்தாண்டுக்கான டி20 உலகக் கோப்பைக்கான புதிய ஜெர்சியை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டது.

    விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்றவர்கள் இந்த ஜெர்சியை அறிமுகப்படுத்தினர். 1992-ம் ஆண்டு இந்திய அணி அணிந்திருந்த ஜெர்சியை போன்று கடந்த டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய வீரர்கள் அணிந்திருந்த நிலையில் அதனை தற்போது மாற்றியுள்ளது.


    இந்த ஜெர்சியை இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ கிட் ஸ்பான்சர்களான MPL ஸ்போர்ட்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. "இது ஒரு அணி மட்டுமல்ல, அவர்கள் இந்தியாவின் பெருமை. இது வெறும் ஜெர்சி அல்ல, ஒரு பில்லியன் ரசிகர்களின் ஆசீர்வாதம். இந்திய அணியை உற்சாகப்படுத்த தயாராகுங்கள் "என்று ட்வீட் செய்துள்ளார்.

    இதுகுறித்த பி.சி.சி.ஐ ட்விட்டர் பதிவில், ‘பில்லியன் சியர்ஸ் ஜெர்ஸியை அறிமுகப்படுத்துகிறோம். இந்த ஜெர்சியின் வடிவம் ரசிகர்களின் கோடிக்கணக்கான ஆரவாரத்தை முன்மாதிரியாக கொண்டுவடிவமைக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: