ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

'இந்திய அணியை காப்பாற்ற ஒரே வழி.. தோனியை களமிறக்குங்க' - பிசிசிஐ முக்கிய ஆலோசனை!?

'இந்திய அணியை காப்பாற்ற ஒரே வழி.. தோனியை களமிறக்குங்க' - பிசிசிஐ முக்கிய ஆலோசனை!?

எம்.எஸ்.தோனி

எம்.எஸ்.தோனி

இந்திய அணியில் சிறந்த வீரர்கள் இருந்தும் கோப்பையை கைப்பற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. அதற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பல்வேறு காரணங்களை கூறிவருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Mumbai, India

  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை மீண்டும் அணியில் சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  டி20 உலகக் கோப்பை போட்டி இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை கைப்பற்றியது. அதற்கு முன் நடைபெற்ற இரண்டாம் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்திய அணி நிர்ணையித்த 169 ரன்களை 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இங்கிலாந்து அணி பெற்றது.

  இந்திய அணியில் சிறந்த வீரர்கள் இருந்தும் கோப்பையை கைப்பற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. அதற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பல்வேறு காரணங்களை கூறிவருகின்றனர். இந்திய அணி தைரிமின்றி தயக்கத்துடன் விளையாடியதே காரணம் என முன்னாள் வீரர்கள் பலர் விமர்சித்தனர்.

  இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை மீண்டும் இந்திய அணியில் சேர்க்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய அணியில் பெரிய பொறுப்பை கொடுக்கவுள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

  பிராவோ விடுவிப்பு ; ஜடேஜா தக்கவைப்பு - சிஎஸ்கே பட்டியலின் முழு விபரம்! (news18.com)

  இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 3 வடிவலாக கிரிக்கெட் அணிக்கும் பயிற்சியாளாராக இருப்பதால் அவரது பணிச்சுமை அதிகமாக இருப்பதாக பிசிசிஐ கருதுகிறது. இதனால் ஐசிசி போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக செயல்பட, டி20 அணியில் தோனியை இயக்குனராக சேர்ப்பது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருகிறது.

  கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 போட்டிகளில் இந்திய அணியின் ஆலோசகராக தோனி செயல்பட்டு வந்த நிலையில் அதே டி20 போட்டிகளுக்கு மட்டும் அவரை இயக்குனராக நியமிக்க பிசிசிஐ கணக்குப்போட்டு வருகிறது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: BCCI, MS Dhoni, T20 World Cup