• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதியப்பட்டியல்... கீழே இறக்கப்பட்ட முக்கிய 2 வீரர்கள்...!

கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதியப்பட்டியல்... கீழே இறக்கப்பட்ட முக்கிய 2 வீரர்கள்...!

இந்திய கிரிக்கெட் அணி. (BCCI)

இந்திய கிரிக்கெட் அணி. (BCCI)

BCCI Pay Grade list | மிகச் சிறப்பாக விளையாடும் வீரர்கள் ஏ பிளஸ் பிரிவில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதியப்பட்டியலில் 4 பிரிவுகள் இருக்கும் நிலையில், ஏ பிளஸ் பிரிவில் இருந்து முக்கிய இரு வீரர்கள் ஏ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    இந்திய கிரிக்கெட் நிர்வாக அமைப்பான பிசிசிஐ, வீரர்களுக்கு 4 பிரிவுகளில் ஊதியம் வழங்கி வருகிறது. ஏ பிளஸ், ஏ, பி, சி என்று நான்கு வகையாக வீரர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆண்டுதோறும் சம்பள ஒப்பந்தம் செய்யப்படுகிறது.

    மிகச் சிறப்பாக விளையாடும் வீரர்கள் ஏ பிளஸ் பிரிவில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. இதுபோக, ஒவ்வொரு போட்டிகளுக்கும் என தனித்தனியாக ஊதியம் வழங்கப்படுகிறது.

    Read Also.. VIDEO: வீரர்களை தனது விலையுயர்ந்த காரில் அழைத்துச் சென்ற தோனி!

    இந்த நிலையில், கடந்த ஆண்டு ஏ பிளஸ் பிரிவில் இருந்த ஷிகர் தவான் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர், ஏ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது ஏ பிளஸ் பிரிவில் கேப்டன் கோலி, ரோகித் சர்மா, பும்ப்ரா ஆகியோர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

    ஏ பிரிவில் ஷிகர் தவான் மற்றும் புவனேஷ்வர் குமாருடன் சேர்த்து, அஸ்வின், புஜாரா, தோனி உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர். இந்த பிரிவில் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    சமீபத்தில் மிக சிறப்பாக விளையாடி வரும் ரிஷப் பந்த் ஏ பிரிவுக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Also See...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: