கேல்ரத்னா விருதிற்கு ரோஹித் ஷர்மா பெயரை பரிந்துரைத்தது பிசிசிஐ

கேல்ரத்னா விருதிற்கு ரோஹித் ஷர்மா பெயரையும், அர்ஜூனா விருதிற்கு ஷிகர் தவான், இஷாந்த் ஷர்மா, தீப்தி ஷர்மா ஆகியோர்களின் பெயர்களையும் பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.

கேல்ரத்னா விருதிற்கு ரோஹித் ஷர்மா பெயரை பரிந்துரைத்தது பிசிசிஐ
ரோஹித் ஷர்மா
  • Share this:
கிரிக்கெட் விளையாட்டு சார்பில் நடப்பு ஆண்டு விளையாட்டுத்துறை சார்ந்த விருதுகளுக்கான வீரர்களின் பெயர்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், விளையாட்டு அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

அதன் அடிப்படையில் கேல்ரத்னா விருதிற்கு ரோஹித் ஷர்மா பெயரையும், அர்ஜூனா விருதிற்கு ஷிகர் தவான், இஷாந்த் ஷர்மா, தீப்தி ஷர்மா ஆகியோர்களின் பெயர்களையும் பரிந்துரை செய்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுத் துறையில் நாட்டிற்காக  சாதனை படைத்த வீரர் வீராங்கனைகளுக்கு இந்திய அரசு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சாரியார் போன்ற விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது.


அந்தவகையில் நடப்பாண்டில்  இந்த விருதுகளுக்கு தகுதியான வீரர்கள் யார் என்பதை அந்தந்த விளையாட்டு சங்கங்கள் தேர்ந்தெடுத்து, ஜூன் 3 ம் தேதிக்குள் விளையாட்டு அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் விளையாட்டு சங்கங்கள் தங்கள் சார்ந்த விளையாட்டில் சிறந்து விளங்கியவர்களின் பெயர்களை பரிந்துரை செய்து வருகிறது. இந்நிலையில் கிரிக்கெட் விளையாட்டில் தகுதியான வீரர்களை பரிந்துரை செய்துள்ளது.
கேல்ரத்னா விருதிற்கு இந்திய அணியின் துணை கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான ரோஹித் ஷர்மாவின் பெயரை பரிந்துரை செய்துள்ளது.2019 ம் ஆண்டிற்கான ஐசிசி சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதை வென்ற ரோஹித் ஷர்மா இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளர். அத்துடன் தலைமை பண்பிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் அதன் அடிப்படையில் இவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அர்ஜூனா விருதிற்கு ஆடவர் அணியிலிருந்து ஷிகர் தவான், இஷாந்த் ஷர்மா, பெயர்களும், மகளிர் அணியிலிருந்து தீப்தி ஷர்மா பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இரண்டு முறை அதிக ரன்கள் குவித்து தங்க பேட் வாங்கிய ஷிகர் தவான்,
டெஸ்ட்,ஒருநாள்,டி 20 என அனைத்து விதமான போட்டிகளிலும் வேகத்தால் எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் இஷாந்த் ஷர்மா
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை குவித்தவரும், தனது மாயாஜால சுழலால் அச்சுறுத்தி வரும் தலைசிறந்த ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மாவின் பெயர்கள் அர்ஜூனா விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 
First published: May 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading