ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

சம்பள பட்டியலில் இருந்து நீக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்… பிசிசிஐ அதிரடி நடவடிக்கை

சம்பள பட்டியலில் இருந்து நீக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்… பிசிசிஐ அதிரடி நடவடிக்கை

பிசிசிஐ

பிசிசிஐ

சர்வதேச ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி வீரர்களின் ஊதியத்தை ஆண்டுதோறும் பிசிசிஐ மாற்றி அமைத்து வருகிறது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக செயல்பட்ட வீரரை பிசிசிஐ சம்பள பட்டியலில் இருந்து நீக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

இதேபோன்று கடந்த ஆண்டில் சிறப்பாக விளையாடிய வீரர்களின் சம்பளத்தை உயர்த்தவும் பிசிசிஐ திட்டமிட்டிருக்கிறது. இதுபற்றிய விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

சர்வதேச ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி வீரர்களின் ஊதியத்தை ஆண்டுதோறும் பிசிசிஐ மாற்றி அமைத்து வருகிறது. வீரர்களின் திறமை மற்றும் போட்டிகளில் பங்கேற்கும் திறனுக்கு ஏற்றவாறு அவர்களின் ஊதியத்தில் மாற்றங்கள் இருக்கும்.

கால்பந்து உலகக்கோப்பை: அர்ஜெண்டினா - குரோஷியா அணிகள் இடையே மோதல்.. களைகட்டும் அரையிறுதி!

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஏ ப்ளஸ், ஏ,பி.சி என 4 பிரிவுகளில் பிரிக்கப்பட்டு ஊதியங்கள் வழங்கப்படுகின்றன. இதில் ஏ ப்ளஸ் பிரிவில் இருப்பவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ. 7 கோடியும், ஏ பிரிவில் இருப்பவர்களுக்கு ரூ. 5 கோடியும், பி பிரிவுக்கு ரூ. 3 கோடியும், சி பிரிவில் உள்ள வீரர்களுக்கு ரூ. 1 கோடியும் ஊதியமாக வழங்கப்படும்.

சரியாக விளையாடாத, திறமை குறைவான வீரர்கள் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விடுவார்கள். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக செயல்பட்ட ரஹானே, ரிதிமன் சஹா, இஷாந்த் சர்மா ஆகியோர் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளிவரவுள்ளது. தற்போது ஏ ப்ளஸ் பிரிவில் விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா ஆகியோர் மட்டும் இருந்தனர். இந்த பிரிவில் அடுத்த ஆண்டில் கே.எல். ராகுலும் சேர்க்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

முதல் டெஸ்ட் போட்டிக்காக தீவிர பயிற்சியில் இந்திய அணி… #PhotoGallery

டி20 போட்டிகளில் உலகில் நம்பர் ஒன் வீரராக சூர்யகுமார் இருந்து வருகிறார். இவர் தற்போது சம்பள பட்டியலில் சி பிரிவில் இருக்கிறார். அதாவது இவருக்கு ஆண்டுக்கு ரூ. 1 கோடி மட்டுமே ஊதியமாக அளிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டில் சூர்யகுமார் ஏ பிரிவுக்கு அதாவது ரூ  5 கோடி சம்பள பிரிவுக்கு மாற்றப்படுவார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதேபோன்று நட்சத்திர ஆட்டக்காரர்களாக மாறியுள்ள ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில், இஷான் கிஷன் உள்ளிட்ட வீரர்கள் சி பிரிவில் இருந்து ரூ. 3 கோடி ஊதியம் வழங்கப்படும் பி பிரிவுக்கு மாற்றப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

First published:

Tags: BCCI