இன்று கூடுகிறது பிசிசிஐ உயர்மட்டக் கூட்டம்

பிசிசிஐ

ஐபிஎல் போட்டிக்களை தொடங்குவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று ஆலோசனை நடத்த உள்ளது.

 • Share this:
  கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதத்திற்குப் பின் இந்திய அணி எந்த போட்டிகளிலும் விளையாடவில்லை. ஐபிஎல், இலங்கை, ஜிம்பாப்வே தொடர்களும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் பிசிசிஐ-யின் உயர்மட்ட கூட்டம் அதன் தலைவர் கங்குலி தலைமையில் இன்று காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ளது.

  அதில், ஐபிஎல் போட்டிகளை எப்போது நடத்துவது? போட்டிகளை வேறு நாட்டிற்கு மாற்றுவது போன்றவை குறித்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க...

  திருப்போரூரில் மூன்று துப்பாக்கிகள் பறிமுதல் ... பகீர் பின்னணி என்ன?

  அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த டி20 உலகக்கோப்பை குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.
  Published by:Vaijayanthi S
  First published: