ஆளில்லா மைதானத்தில் ஐ.பி.எல்: பிசிசிஐ அதிரடி முடிவு..

ஐபிஎல் கோப்பை

நடப்பாண்டு ஐ.பிஎ.ல் போட்டியை நடத்த அனைத்துவித ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  நடப்பாண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29-ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐ.பி.எல் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

  ஐ.பி.எல் தொடர் நடைபெறாமல் போனால் பிசிசிஐ-க்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்படும். அதனால் ஐ.பி.எல் தொடரை வெளிநாடுகளில் நடத்தமா, வீரர்களின் பாதுகாப்பு உள்ளிட்டவை ஆலோசனை செய்யப்பட்டு வந்தது.

  இந்நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நடப்பு ஐபிஎல் தொடர் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் இல்லாத மூடப்பட்ட மைதானத்தில் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

  ரசிகர்கள், அணியின் உரிமையாளர்கள், விளம்பரதாரர்கள், போட்டியை ஒளிபரப்பும் நிறுவனம் மற்றும் அனைத்து பங்குதாரர்களும் இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரை எதிர்பார்த்துள்ளதாகவும் கங்குலி தெரிவித்தார்.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Published by:Vijay R
  First published: