Home /News /sports /

பிரச்சனை பிசிசிஐ-யிடம்தான் - கோலி கேப்டன்சி விவகாரத்தில் ஷாகித் அஃப்ரீடி விமர்சனம்

பிரச்சனை பிசிசிஐ-யிடம்தான் - கோலி கேப்டன்சி விவகாரத்தில் ஷாகித் அஃப்ரீடி விமர்சனம்

ஷாகித் அஃப்ரீடி, விராட் கோலி.

ஷாகித் அஃப்ரீடி, விராட் கோலி.

விராட் கோலியை ஒருநாள் கேப்டன்சியிலிருந்து நீக்கியது தொடர்பான சர்ச்சை குறித்து பாகிஸ்தான் முன்னாள் லெக் ஸ்பின் ஆல்ரவுண்டர் ஷாகித் அஃப்ரீடி பிசிசிஐ-யை விமர்சனம் செய்துள்ளார்.

    விராட் கோலியை ஒருநாள் கேப்டன்சியிலிருந்து நீக்கியது தொடர்பான சர்ச்சை குறித்து பாகிஸ்தான் முன்னாள் லெக் ஸ்பின் ஆல்ரவுண்டர் ஷாகித் அஃப்ரீடி பிசிசிஐ-யை விமர்சனம் செய்துள்ளார்.

    அதாவது ஒரு கிரிக்கெட் வாரியம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடக்கவில்லை என்று கூறுகிறார் ஷாகித் அஃப்ரீடி. டி20 கேப்டன்சியை உதற வேண்டாம் என்று விராட் கோலியிடம் மன்றாடிக் கேட்டுக் கொண்டதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூற விராட் கோலி அப்படி யாரும் தன்னிடம் கேட்டுக் கொள்ளவும் இல்லை, ஒன்றும் இல்லை என்று கோலி செய்தியாளர்கள் சந்திப்பில் மறுத்தது பரபரப்பானது.

    ஆனால் கங்குலி இதைப்பற்றி பிசிசிஐ-யிடம் விட்டு விடுங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறிவிட்டார். இந்த சர்ச்சை பெரிய விவகாரமாக வெடிக்க முகமது ஷமிக்கு எதிராக நடந்த சமூக ஊடக அவதூறுகளையும் அவர் முஸ்லிம் என்பதற்காக உலகக்கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தானுடன் தோற்றதற்காக இலக்கு வைத்து தாக்கப்பட்டதையும் விராட் கோலி ‘கோழைகள்’ என்றும் தைரியம் இருந்தால் நேரில் பேசுங்கள் என்றும் கடுமையாக ட்ரால் படையை எச்சரித்தார்.

    இது ஒருதரப்பினரை கடும் எரிச்சல் படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது, இதனால் அவரை கேப்டன்சியிலிருந்து தூக்க முடிவெடுத்ததாகவும் சில ஊடகங்கள் கூறியது.

    ஆனால் சுனில் கவஸ்ஸ்கர் கூறும்போது, ‘டி20 கேப்டன்சியைத் துறக்கிறேன், ஒருநாள், டெஸ்ட்டில் கேப்டனாக நீடிப்பேன்’ என்று கோலி தெனாவட்டாக தெரிவித்ததற்கான பலனை அனுபவிக்கிறார், என்றும் அதிகாரத்தில் உள்ளவர்களை கோலி சீண்டி விட்டார் என்றும் கூறினார்.

    உண்மையான காரணமாக டி20க்கும் ஒருநாள் போட்டிகளுக்கும் வேறு வேறு கேப்டன் தேவையில்லை என்றுதான் ரோகித் சர்மாவை கேப்டனாக நியமித்ததாக பிசிசிஐ தெரிவித்தது.

    இந்நிலையில் ஷாகித் அஃப்ரீடி கூறும்போது, “விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய விவகாரத்தை தற்போதைய நிலையை விட சிறந்த வகையில் கையாண்டிருக்க வேண்டும். கிரிக்கெட் வாரியத்தின் பணி மிக முக்கியமானது என்று நான் எப்போதுமே நம்புகிறவன்.எந்தவொரு குறிப்பிட்ட வீரர்களுடனும், தேர்வுக்குழு கமிட்டி திறமையான வகையில் கலந்துரையாட வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.

    Also Read: ஐசிசி ரேங்கிங்ஸ்: கோலி 7ம் இடத்துக்கு சரிவு- லபுஷேன் நம்பர் 1, பாபர் ஆஸம் டி20 நம்பர் 1

    மேலும், "கிரிக்கெட் வாரியம் அவர்களுடைய திட்டம் என்ன என்பதையும், அணிக்கு எது சிறந்ததாக இருக்கும் என கேப்டனிடம் வெளிப்படையாக நேருக்கு நேர் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு கேப்டனின் கருத்தை அவர்கள் கேட்டு அறியவேண்டும் இல்லையெனில் இது போன்ற பிரச்சினைகள் முடிவுக்கு வராது” என்று ஷாகித் அஃப்ரீடி கூறியுள்ளார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Captain Virat Kohli, Shahid Afridi

    அடுத்த செய்தி