• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • மகளிர் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? - விண்ணப்பங்கள் வரவேற்பு

மகளிர் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? - விண்ணப்பங்கள் வரவேற்பு

பிசிசிஐ. (Getty Images)

பிசிசிஐ. (Getty Images)

#BCCI Invites Application For Head Coach - Senior Women | புதிய பயிற்சியாளருக்கான தேர்வு டிசம்பர் மாதம் 20-ம் தேதி மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவகலத்தில் நடைபெற உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புது பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த துஷார் ஆரோத் பதவி விலகியதை அடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் ரமேஷ் பவார் தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். மகாரஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் பவார் (40), ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளராக இருந்தார். இந்திய அணிக்காக அவர் விளையாடிய போட்டிகள் 2 டெஸ்ட் மற்றும் 31 ஒருநாள் ஆட்டங்கள் தான். இவரை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டபோதே பல்வேறு விமர்சனங்கள் வந்தன.

    Ramesh Powar, Mithali Raj, BCCI
    பயிற்சியாளர் பவாருடன் மிதாலி ராஜ் (BCCI)


    முதலில் தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பவார், மகளிர் டி-20 உலகக்கோப்பை வரை பணியைத் தொடருவார் என்று பிசிசிஐ அறிவித்தது. டி-20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி லீக் சுற்று வரை சிறப்பாக விளையாடி வந்தது. ஆனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. அந்த போட்டியில், மூத்த வீராங்கனை மிதாலி ராஜை ஏன் சேர்க்கவில்லை என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

    மிதாலி ராஜ் மற்றும் ரமேஷ் பவார் ஆகியோர் இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களைக் கூறி வந்தனர். அதே சமயம், பயிற்சியாளர் ரமேஷ் பவாரின் பதவிக்காலம் இன்று (30.11.18) முடிவடைந்தது. மிதாலி ராஜ் உடனான பிரச்னையால் அதிருப்தி அடைந்த பிசிசிஐ, பவாரின் பதவிக்காலத்தை நீட்டிக்க விரும்பவில்லை. மகளிர் அணிக்கான புதிய பயிற்சியாளர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.



    இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத், ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் டாம் மூடி உள்ளிட்டோரின் பெயர்கள் பயிற்சியாளர் பதவிக்காக வரிசையில் இருக்கிறது. புதிய பயிற்சியாளருக்கான தேர்வு டிசம்பர் மாதம் 20-ம் தேதி மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவகலத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பார்க்க...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesan L
    First published: