ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

டி20 உலகக்கோப்பை தோல்வி : சேத்தன் சர்மா தேர்வு குழு நீக்கம் - பிசிசிஐ அதிரடி

டி20 உலகக்கோப்பை தோல்வி : சேத்தன் சர்மா தேர்வு குழு நீக்கம் - பிசிசிஐ அதிரடி

மாதிரி படம்

மாதிரி படம்

புதிய தேர்வு குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பிசிசிஐ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து சேத்தன் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழுவை பிசிசிஐ அதிரடியாக கலைத்துள்ளது.

  டி20 உலகக் கோப்பை போட்டி இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை கைப்பற்றியது. அதற்கு முன் நடைபெற்ற இரண்டாம் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்திய அணி நிர்ணயித்த 169 ரன்களை 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இங்கிலாந்து அணி பெற்றது.

  இந்திய அணியில் சிறந்த வீரர்கள் இருந்தும் கோப்பையை கைப்பற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. அதற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பல்வேறு காரணங்களை கூறி வருகின்றனர். இந்திய அணி தைரியமின்றி தயக்கத்துடன் விளையாடியதே காரணம் என முன்னாள் வீரர்கள் பலர் விமர்சித்தனர்.

  இந்த நிலையில் டி20 உலககோப்பை தொடர் தோல்வி காரணமாக சேத்தன் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழுவை பிசிசிஐ அதிரடியாக நீக்கியுள்ளது. மேலும் புதிய தேர்வு குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பிசிசிஐ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

  இதையும் படிங்க: பிபாவுக்கு எப்படி வருமானம் வருகிறது தெரியுமா? வியக்க வைக்கும் பிபா அமைப்பின் வருமானம்

  புதிய தேர்வு குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க என்ன தகுதிகள் வேண்டும் என்பது குறித்து அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 7 டெஸ்ட் போட்டிகள் அல்லது குறைந்தபட்சம் 30 முதல் வகுப்பு போட்டிகள் விளையாடி இருக்க வேண்டும் குறைந்தபட்சம் 10 ஒருநாள் போட்டி 20 முதல் தர போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும் கிரிக்கெட்டில் இருந்து 5 வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்று இருக்க வேண்டும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: BCCI, Indian cricket team