ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக வெளியேறிய ஹர்திக் பாண்டியா நீண்ட ஓய்வில் இருந்து வந்தார். காயம் குணம் அடைந்துவிட்டதை வெளிப்படுத்தும் விதமாக அவ்வப்போது பயிற்சியில் ஈடுபடும் வீடியோக்களை ட்விட்டரில் பாண்டியா பகிர்ந்து வந்தார்.
🏋💪💪🔥🔥🔥 pic.twitter.com/2Xwvy3ELTb
— hardik pandya (@hardikpandya7) November 28, 2018
கடந்த இரண்டு மாத காலமாக ஓய்வுக்குப் பிறகு, உடற்தகுதியை நிரூபிக்க ஒரு வாய்ப்பாக ரஞ்சி தொடருக்கான பரோடா அணியில் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டார்.
மும்பை அணிக்கு எதிராக களமிறங்கிய முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பாண்டியா மரண மாஸ் காட்டினார். இதனால், அவரை மீண்டும் இந்திய அணியில் சேர்த்துக்கொள்ள பிசிசிஐ தேர்வுக்குழு முடிவு செய்தது. இந்நிலையில், காயத்தால் விலகிய பிரித்வி ஷா, எஞ்சியுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ இன்று (17.12.18) அறிவித்தது.
UPDATE: @hardikpandya7 and @mayankcricket added to #TeamIndia's Test squad. #AUSvIND
Details: https://t.co/rWndXYJ2eN pic.twitter.com/t20hXpwNBH
— BCCI (@BCCI) December 17, 2018
பிரித்வி ஷாவுக்கு பதிலாக கர்நாடகாவைச் சேர்ந்த மயங் அகர்வாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், காயத்தில் இருந்து மீண்டு வந்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
Also Watch...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hardik Pandya, India vs Australia, INDvAUS, Prithvi Shaw