• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • கோலியின் முன்னிலையில்தான் அணியைத் தேர்வு செய்தோம்; இப்ப என்ன பிரச்சனை? : பிசிசிஐ காட்டம்

கோலியின் முன்னிலையில்தான் அணியைத் தேர்வு செய்தோம்; இப்ப என்ன பிரச்சனை? : பிசிசிஐ காட்டம்

விராட் கோலி

விராட் கோலி

இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் காயம் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது, அவருக்குப் பதிலாக 2 வீரர்களை இங்கிலாந்துக்கு அனுப்புமாறு இந்திய அணி நிர்வாகம் கோரிக்கை வைத்தது. இது இப்போது சிக்கல்களை அதிகரித்துள்ளது.

  • Share this:
    இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் காயம் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது, அவருக்குப் பதிலாக 2 வீரர்களை இங்கிலாந்துக்கு அனுப்புமாறு இந்திய அணி நிர்வாகம் கோரிக்கை வைத்தது. இது இப்போது சிக்கல்களை அதிகரித்துள்ளது.

    தேவ்தத் படிக்கல், பிரிதிவி ஷா ஆகியோரை அனுப்புமாறு இந்திய அணி நிர்வாகம் இங்கிலாந்திலிருந்து கேட்க அதற்கு அணித்தேர்வுக்குழு பதில் அளிக்கவில்லை, கண்டு கொள்ளாமல் விட்டது.

    இதனையடுத்து பிசிசிஐ விராட் கோலி முன்னிலையில்தானே அணியைத் தேர்வு செய்து அனுப்பினோம் என்று காட்டமாக தெரிவித்துள்ளது.

    பிரிதிவி ஷா


    இலங்கைக்கு எதிரான வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்காக படிக்கல், பிரிதிவி ஷா தேர்வு செய்யப்பட்டு அவர்கள் முழுவீச்சுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றில் பெயர் கூற விரும்பாத பிசிசிஐ அதிகாரி கூறும்போது, “அணி நிர்வாகம் தெளிவுடன் இருக்க வேண்டும். அணி நிர்வாகத்தின் தேவைகளுக்கேற்ப அணித்தேர்வாளர்கள் செயல்படுகின்றனர்.

    கேப்டன் விராட் கோலி முன்னிலையில்தான் அணி தேர்வு செய்யப்பட்டது. தேர்வு செய்து அனுப்பப்பட்ட வீரர்களை எவ்வாறு பயன்படுத்தப் போகிறோம் என்பதில் அணி நிர்வாகம் தெளிவுடன் செயல்படுவது நல்லது. ராகுல் தொடக்க வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார், இதில் மாற்றம் என்றால் அதை முன் கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும்” என்றார்.

    ரோகித் சர்மா, மாயங்க் அகர்வால் தொடக்கத்தில் இறங்க கே.எல்.ராகுலை மிடில் ஆர்டரில் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது, அப்போது ஹனுமா விகாரிக்கு ஆப்பு தயாராகிறது என்று தெரிகிறது, முச்சதமடித்த கருண் நாயரையே கோலி தூக்கி எறியும் போது தான் ஆடாத சிட்னி டெஸ்ட்டை டிரா செய்தவரையா கோலி தேர்வு செய்வார்?

    அபிமன்யூ ஈஸ்வரன் ரஞ்சி டிராபிகளில் சரியாக ஆடாத நிலையில் அவரை எப்படி ஆண்டர்சன், பிராட், ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் உட்டுக்கு எதிராக களமிறக்க முடியும்?

    இது தொடர்பாக அந்த பிசிசிஐ அதிகாரி கூறும்போது, “இங்கிலாந்து இங்கு வந்து ஆடியதிலிருந்தே அபிமன்யூ ஈஸ்வரன் அணியுடன் இருக்கிறார். அபிமன்யூ ஈஸ்வரனை ஏன் பயன்படுத்தத் தயக்கம் என்பதை அணி நிர்வாகம் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் மாற்று வீரரை அனுப்புவதற்கு சவுகரியாமாக இருக்கும்” என்றார்.

    ஒருவேளை புஜாரா, ரோகித்சர்மாவை தொடக்கத்தில் இறக்கி ராகுலை ஒன் டவுனில் இறங்கச் செய்யும் முடிவைக் கூட எடுக்க வாய்ப்பிருக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: