ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

மீண்டும் ஐபிஎல் அணிக்கு திரும்புகிறாரா சவுரவ் கங்குலி? அறிவிப்பு விரைவில் வெளியாகிறது

மீண்டும் ஐபிஎல் அணிக்கு திரும்புகிறாரா சவுரவ் கங்குலி? அறிவிப்பு விரைவில் வெளியாகிறது

சவுரவ் கங்குலி

சவுரவ் கங்குலி

துபாய் கேபிடல்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் ஆகிய அணிகளை சவுரவ் கங்குலி மேற்பார்வையிட்டு வருகிறார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி மீண்டும் ஐபிஎல் அணிக்கு திரும்பப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த சவுரவ் கங்குலி லெஜெண்டரி கிரிக்கெட் வீரராக புகழப்படுகிறார். சச்சினுக்கு இணையாக கங்குலிக்கு இன்றளவும் அதிக ரசிகர்கள் உள்ளனர். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த கங்குலியின் பதவிக்காலம் கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து 20 ஓவர் போட்டியில் பங்கேற்கும் அணிகள் மீது சவுரவ் கங்குலி கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் துபாய் கேபிடல்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவில் டி20 கிரிக்கெட் தொடரில் இடம் பெற்றுள்ள பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் ஆகிய அணிகளை சவுரவ் கங்குலி மேற்பார்வையிட்டு வருகிறார். இந்த நிலையில் மீண்டும் அவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு திரும்புவார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

அந்தவகையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இயக்குனராக சவுரவ் கங்குலி செயல்படுவார் என்று கூறப்படுகிறது. அதன் உரிமையாளர்களுடன் சவுரவ் கங்குலி நல்ல தொடர்பில் இருக்கிறார்.

பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்… முதல் இன்னிங்ஸில் நியூசி. 449 ரன்கள் குவிப்பு

ஏற்கனவே ஐபிஎல் அணிகளுடன் இணைந்து செயல்பட்ட அனுபவம் அவருக்கு உள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆலோசகராக கடந்த 2019இல் கங்குலி பணியாற்றி வந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக சேத்தன் சர்மா தொடர்வார் என தகவல்

இந்நிலையில் அவர் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இந்த ஐபிஎல் தொடரில் திரும்புவார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

First published:

Tags: Cricket, Ganguly, IPL