ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஸ்பான்சர்கள், போட்டி ஒளிபரப்பு குறித்து முக்கிய முடிவு… பிசிசிஐ அவசர கூட்டம் இன்று நடைபெறுகிறது…

ஸ்பான்சர்கள், போட்டி ஒளிபரப்பு குறித்து முக்கிய முடிவு… பிசிசிஐ அவசர கூட்டம் இன்று நடைபெறுகிறது…

பிசிசிஐ

பிசிசிஐ

ஸ்டார் மீடியா நிறுவனம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை, நேரடி ஒளிபரப்பு செய்ய உரிமம் பெற்றுள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஸ்பான்சர்கள், போட்டி ஒளிபரப்பு உரிமம் உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க, இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் நேரடியாக நடைபெறாமல், வீடியோ கான்பரன்ஸ் முறையில் நடைபெறுகிறது. தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஸ்பான்சராக பைஜூஸ் (Byjus) நிறுவனம் இருந்து வருகிறது. இந்த நிறுவனம் பிசிசிஐ உடனான ஸ்பான்சர் ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ள விரும்புவதாக கடந்த மாதம் நடந்த கூட்டத்தின் போது தெரிவித்திருந்தது.

வரும் மார்ச் மாதம் வரையில், ஸ்பான்சர்ஷிப்பை நீட்டிக்குமாறு பைஜூஸ் நிறுவனத்தை பிசிசிஐ கேட்டுக்கொண்டிருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த நிறுவனம், நிதி நெருக்கடியை காரணமாக கூறியதுடன், தங்களது நிறுவனத்தில் இருந்து 5 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்களை பணி நீக்கம் செய்யவிருப்பதாக கூறியது. இந்த நிறுவனத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

முன்னதாக கடந்த ஜூன் மாதம் இந்திய அணிக்கான ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை நவம்பர் 2023-ஆம் ஆண்டு வரை நீடிப்பதற்கு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்நிலையில் ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ள விரும்புவதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஸ்பான்சர் நிறுவனமாக ஓப்போ (OPPO) மொபைல்ஸ் இருந்துவந்தது. 2019 க்கு பின்னர் பைஜூஸ் முக்கிய ஸ்பான்ஸராக மாறியது. கடந்த ஆண்டு கத்தாரில் நடந்த உலக கோப்பை கால்பந்தாட்ட தொடரில் ஸ்பான்சர் நிறுவனங்களில் ஒன்றாக பைஜூஸ் இடம்பெற்றிருந்தது.

தற்போது இந்த நிறுவனம் விலகிக் கொள்ள முடிவு செய்திருப்பதால், இதுபற்றி பிசிசிஐ ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

இந்திய தொடருக்கான நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் முக்கிய வீரர் நீக்கம்…

இதேபோன்று ஸ்டார் மீடியா நிறுவனம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை, நேரடி ஒளிபரப்பு செய்ய உரிமம் பெற்றுள்ளது. 2023 முதல் 2027ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு மொத்தம் 48,390 கோடி ரூபாய்க்கு இந்த ஒப்பந்தத்தை ஸ்டார் மீடியா நிறுவனம் பிசிசிஐ –யிடம் ஏற்படுத்தியுள்ளது.

‘மும்பை இந்தியன்ஸ் அணியில் 12 ஆண்டுகள் நிறைவு’ – குடும்பத்தைப் போன்றது என ரோகித் சர்மா உருக்கம்

இதேபோல் உள்ளூரில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமையையும் ஸ்டார் மீடியா நிறுவனம் பெற்றிருக்கிறது. இதுபற்றியும் இன்றைய பிசிசிஐ கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

First published:

Tags: BCCI, Cricket