உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் குடும்பத்துக்கு ரூ.2 கோடியை வழங்கினார் தல தோனி!

#BCCI donates Rs.20 crore #IPL opening ceremony fund to #CRPF | முதலில் இரு அணிகளின் கேப்டன்கள் ஐ.பி.எல் கோப்பையை அறிமுகப்படுத்தினர்.

உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் குடும்பத்துக்கு ரூ.2 கோடியை வழங்கினார் தல தோனி!
ரூ.2 கோடியை வழங்கினார் தல தோனி.
  • News18
  • Last Updated: March 23, 2019, 11:07 PM IST
  • Share this:
ஐ.பி.எல். தொடக்க போட்டி தொடங்குவதற்கு முன்பு, உயிரிழந்த ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு ரூ. 2 கோடியை சி.எஸ்.கே சார்பில் தோனி வழங்கினார்.

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த 2019-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் இன்று (மார்ச் 23) சென்னையில் தொடங்கியது.

சேப்பாக்கத்தில் நடைபெறும் தொடக்க போட்டியில் தல தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கிங் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.


dhoni, kholi
தோனி மற்றும் கோலி.


முதலில் இரு அணிகளின் கேப்டன்கள் ஐ.பி.எல் கோப்பையை அறிமுகப்படுத்தினர். டாஸ் வென்ற சி.எஸ்.கே கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தார். அதன்படி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்கிறது.இதனை அடுத்து, ஐ.பி.எல் தொடக்க போட்டி தொடங்குவதற்கு முன்பு, உயிரிழந்த சி.ஆர்.பி.எப் ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு ரூ.20 கோடியை பிசிசிஐ சார்பில் வழங்கப்பட்டது.

சி.எஸ்.கே அணி சார்பில் அளிக்கப்பட்ட ரூ.2 கோடியை தோனி வழங்கினார்.

BCCI donates, Dhoni
ரூ.2 கோடியை வழங்கினார் தல தோனி.


புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஐ.பி.எல் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டது. தற்போது, அதற்கான தொகை ராணுவ வீரர்களின் நலனுக்காக வழங்கப்பட்டுள்ளது.

#CSKvRCB: சி.எஸ்.கே அணியின் ஆடும் லெவன் அணி இதுதானா?

VIDEO: பயிற்சியிலேயே இந்த அடியா...? மைதானத்துக்கு வெளியே பந்தை பறக்கவிட்ட தோனி...!

சேப்பாக்கத்தில் நான்கு அடுக்கு பாதுகாப்பு... 2 ஆயிரம் போலீசார் குவிப்பு!

முதல் முறையாக ராணுவ இசை உடன் தொடங்கும் ஐ.பி.எல் 2019!

Also Watch...

First published: March 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading