• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • 5-வது டெஸ்ட் போட்டியை இந்தியா விரும்பவில்லை அதுதான் விஷயம்: மைக்கேல் ஹோல்டிங்

5-வது டெஸ்ட் போட்டியை இந்தியா விரும்பவில்லை அதுதான் விஷயம்: மைக்கேல் ஹோல்டிங்

மைக்கேல் ஹோல்டிங்

மைக்கேல் ஹோல்டிங்

ஐசிசியில் பிசிசிஐயின் பணபல ஆதிக்கத்தை மற்ற வாரியங்கள் புறக்கணிக்கத் தொடங்க வேண்டும், இப்படி டெஸ்ட் போட்டியைத் துறந்ததற்காக அடுத்த முறை இந்தியாவுடன் 2 டெஸ்ட் 2 டி20 கொண்ட போட்டிகளில்தான் பங்கேற்போம் என்று அறிவிக்க வேண்டு, பணபலம் வருமானம் போன்றவை ஒன்சைடு கிடையாது, எதிரணிகளும் ஒத்துழைத்தால்தான் பிசிசிஐக்கும் வருமானம் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற குரல்கள் இங்கிலாந்தில் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

  • Share this:
    கொரோனாவைக் காரணம் காட்டி 5வது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்தியா விலகியது கடும் சர்ச்சைகளை வரும் காலங்களில் உருவாக்கலாம் என்ற நிலையில் உண்மையில் இந்தியா 5வது டெஸ்ட்டை விரும்பவில்லை என்பதுதான் விஷயம் என்று மே.இ.தீவுகள் லெஜண்ட் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.
    அதாவது இதை அவர் முன்னாள் இந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர் திலிப் தோஷியிடம் கூறியுள்ளார்.

    திலிப் தோஷி அதனை வெளியுலகிற்குக் கொண்டு வந்துள்ளார். மேலும் ரவி சாஸ்திரி பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழாதான் கொரோனாவுக்குக் காரணம் என்று கூறும் திலிப் தோஷி, அந்த விழாவுக்கு தானும் சென்றதாகவும் அங்கு சமூக இடைவெளியும் கடைப்பிடிக்கப்படவில்லை ஒருவர் கூட முகக்கவசம் அணியவில்லை என்று உண்மையைப் போட்டு உடைத்துள்ளார்.

    மைக்கேல் ஹோல்டிங் கூறியதாக திலிப் தோஷி கூறியதாவது: “நான் என் உற்ற நண்பர் மைக்கேல் ஹோல்டிங்குடன் பேசிக்கொண்டிருந்தேன், அப்போது அவர் இந்திய கிரிக்கெட் வாரியம் கடைசி டெஸ்ட் போட்டி நடப்பதை விரும்பவில்லை இதுதான் விஷயம் என்றார். ஓவல் டெஸ்ட் போட்டியுடனேயே தொடர் முடிய வேண்டும் என்று முன் கூட்டியே திட்டமிட்டு விட்டனர் என்றார். அப்போதுதான் ஐபிஎல் தொடரில் பங்கேற்க வீரர்களுக்கு போதிய கால அவகாசம் இருக்கும் என்று கருதி பிசிசிஐ 5வது டெஸ்ட் போட்டியை முன் தவிர்த்துள்ளனர் என்று ஹோல்டிங் கூறினார்” என்றார் தோஷி.

    ரவி சாஸ்திரிக்கு கொரோனா ஏற்பட்டதன் காரணமாகக் கூறப்படும் புத்தக வெளியீட்டு விழாவுக்கு நானும் சென்றிருந்தேன் அங்கு யாரும் முகக்கவசம் அணியவில்லை, சமூக இடைவெளி பராமரிக்கவில்லை. பிரதமர் போரிஸ் ஜான்சன் இங்கிலாந்து பாதுகாப்பான இடம் என்று கூறிவருகிறார். ஆனால் நான் மாஸ்க் அணிந்து தான் செல்வேன். மற்றவர்களை நான் நம்பவில்லை என்று பொருளல்ல, எனக்கு நான் தான் பாதுகாப்பு அளித்தக் கொள்ள முடியும் என்பதால்” என்றார் திலிப் தோஷி.

    ஐபிஎல் தொடருக்காக இந்த 5வது டெஸ்ட் போட்டியை விளையாடாமல் இங்கிலாந்து வாரியத்துக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது பிசிசிஐ என்ற விமர்சனங்களைத் தாண்டி இப்படியா ஒரு பொறுப்புள்ள வாரியம் செயல்படும் என்ற விமர்சனங்களும் அங்கு தலைதூக்கியுள்ளன.

    ஐசிசியில் பிசிசிஐயின் பணபல ஆதிக்கத்தை மற்ற வாரியங்கள் புறக்கணிக்கத் தொடங்க வேண்டும், இப்படி டெஸ்ட் போட்டியைத் துறந்ததற்காக அடுத்த முறை இந்தியாவுடன் 2 டெஸ்ட் 2 டி20 கொண்ட போட்டிகளில்தான் பங்கேற்போம் என்று அறிவிக்க வேண்டு, பணபலம் வருமானம் போன்றவை ஒன்சைடு கிடையாது, எதிரணிகளும் ஒத்துழைத்தால்தான் பிசிசிஐக்கும் வருமானம் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற குரல்கள் இங்கிலாந்தில் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: