#IPL2019 | சூதாட்ட சர்ச்சையில் ரிஷப் பண்ட்? பிசிசிஐ பதில்!

#RishabhPant’s comment caught on #stumpmic | கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் பேசியது ஸ்டம்ப் மைக்கில் தெளிவாக பதிவானது. #DDvKKR

news18
Updated: April 1, 2019, 5:17 PM IST
#IPL2019 | சூதாட்ட சர்ச்சையில் ரிஷப் பண்ட்? பிசிசிஐ பதில்!
எதிரணி பேட்ஸ்மேனை கவனிக்கும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். (BCCI)
news18
Updated: April 1, 2019, 5:17 PM IST
ஐ.பி.எல் போட்டியின்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் ரிஷப் பண்ட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் சர்ச்சை வெடித்துள்ளது.

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று முன்தினம் (மார்ச் 30) நடந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் சூப்பர் ஓவரில் டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது.

போட்டியில் கொல்கத்தா அணியின் பேட்டிங்கின்போது 4-வது ஓவரில் விக்கெட் ரிஷப் பண்ட் பேசியது ஸ்டம்ப் மைக்கில் தெளிவாக பதிவானது. அதில், ‘இந்த பந்து பவுண்டரிக்கு செல்லும்’ என பந்துவீசுவதற்கு முன்பே கூறியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்கில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

IPL, DD, Rishabh Pant, BCCI
அம்பயரிடம் அவுட் கேட்கும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். (BCCI)


பந்து போடுவதற்கு முன்பே பவுண்டரிக்கு செல்லும் என ரிஷப் பண்ட்-க்கு எப்படி தெரியும்?, முன்பே தீர்மானிக்கப்பட்டு விட்டது. சூதாட்டம் நடக்கிறது என பல்வேறு கருத்துக்களை கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்கில் தெரிவித்திருந்தனர்.



முன்னாள் ஐ.பி.எல் நிர்வாக தலைவர் லலித் மோடியும் இது முற்றிலும் சூதாட்டம் என்று குற்றம் சாட்டியிருந்தார்.











இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஃபீல்டர்களை குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தினால் பவுண்டரியைத் தடுக்கலாம் என்ற கோணத்தில் கேப்டன் ஷ்ரேயாஸ்-க்கு அறிவுறுத்தியுள்ளார். அதற்கு முன் என்ன பேசினார் என தெரியவில்லை. ஆதாரம் இல்லாமல் இளம் கிரிக்கெட் வீரரை அவமானப்படுத்த கூடாது” என தெரிவித்தார்.

வைரலாகும் தல தோனியின் ஹாட்ரிக் சிக்ஸர் வீடியோ!

உலகக்கோப்பைக்கான இந்திய அணி எப்போது அறிவிப்பு? பிசிசிஐ தகவல்!

#CSKvRR | டி-20 வரலாற்றில் இமாலய சாதனை படைத்த சுரேஷ் ரெய்னா!

ஹாட்ரிக் தோல்வி.. ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்... அதிருப்தியில் ராஜஸ்தான் அணி!

தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்... ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

தோனியை அவுட்டாக்கமாட்டேன்... அடம்பிடித்த பந்து!

Also Watch...




PHOTOS | ஹாட்ரிக் வெற்றி: சூப்பர் கோச் ஸ்டீஃபன் ஃபிளெமிங்கின் பிறந்தநாள் கொண்டாட்டம்!




POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:





விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...