முகப்பு /செய்தி /விளையாட்டு / சவுரவ் கங்குலிக்கு கொரோனா பாதிப்பு

சவுரவ் கங்குலிக்கு கொரோனா பாதிப்பு

சவுரவ் கங்குலி

சவுரவ் கங்குலி

Sourav Ganguly | முன்னாள் இந்திய கேப்டனும் தற்போதைய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

முன்னாள் இந்திய கேப்டனும் தற்போதைய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தகவல்கள் தெரிவித்துள்ளன. நேற்று இரவு அவருக்கு கொரோன பாசிட்டிவ் என்று ரிப்போர்ட் வந்துள்ளது.

கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் கங்குலி அனுமதிக்கப்பட்டிருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது வைரல் லோடு 19.5 என்று சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர் இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் கேஸ்கள் அதிகரித்து வருகின்றன கொல்கத்தாவில் ஞாயிறன்று 544 பேருக்கு புதிதாக கொரோன தொற்றியுள்ளது.

ஜனவரி 2021-ல் கங்குலிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு இவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சில நாட்களில் உடல் நிலை ஸ்திரமடைந்தது.

Also Read: 15 - 18 வயதுடைய சிறார்களுக்கான தடுப்பூசி ஜனவரி 1 முதல் முன்பதிவு

இப்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார், இன்னும் மேல் விவரங்களுக்கு காத்திருப்போம்...

First published:

Tags: Corona positive, Omicron, Sourav Ganguly