• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • பாகிஸ்தான் வீரர்களைக் கொண்டாடும் பிசிசிஐ..? நெட்டிசன்கள் கடும் விமர்சனம்!

பாகிஸ்தான் வீரர்களைக் கொண்டாடும் பிசிசிஐ..? நெட்டிசன்கள் கடும் விமர்சனம்!

பிசிசிஐ. (Getty Images)

பிசிசிஐ. (Getty Images)

BCCI celebrating Pakistan cricket? | உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை இந்திய அணி புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் ஆட்டோகிராப் போட்ட பேட்டுகள் நீக்கப்படாமல் இருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் நிகழ்த்திய வெடிகொண்டு தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    Pulwama Attack, ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல், CRPF-attack
    புல்வாமா வெடிகொண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்ட இடம்.


    புல்வாமா தாக்குதலின் எதிரொலியால், நாட்டின் மதிப்பு மிக்க கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா அமைப்பு மொஹாலியில் நினைவுகளாக வைத்திருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் மைதானம் மற்றும் முன்னாள் கேப்டன் இம்ரான் கானின் புகைப்படங்களை உடனடியாக அகற்றியது.

    உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை இந்திய அணி புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

    CCI, சிசிஐ
    பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் இம்ரான் கானின் புகைப்படங்களை உடனடியாக அகற்றிய சிசிஐ.


    இந்நிலையில், மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் ஆட்டோகிராப் போட்ட பேட்டுகள் நீக்கப்படாமல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது.







    பாகிஸ்தான் அணி உடன் எப்போதும் இந்திய அணி விளையாடக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், பிசிசிஐ தனது தலைமை அலுவலகத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட்டை கொண்டாடி வருகிறது. இந்தச் செய்தியை அறிந்த நெட்சன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    பாகிஸ்தானுடன் விளையாடாவிட்டால் இந்தியா புள்ளிகளை இழக்கும்: பிசிசிஐ தகவல்!

    Also Watch...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesan L
    First published: